Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2015 ஏப்ரல் 17 , மு.ப. 07:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒரு நாளில் இரு தாய்மார் ஆறு குழந்தைகளை பிரசவித்துள்ளனர் என்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்திய நிபுணர் டாக்டர் எம்.திருக்குமார் தெரிவித்தார்.
கிரானை சேர்ந்த டினோரஞ்சி முத்துக்கிருஸ்ணன் மூன்று குழந்தைகளையும் தன்னாமுனையை சேர்ந்த மேகானந்தி சுதாகரன் மூன்று குழந்தைகளையும் பிரசவித்துள்ளனர்.
இந்த குழந்தைகள் போதனா வைத்தியசாலையின் சிசுக்கள் விசேட சிகிச்சை பிரிவு, சிசுக்கள் அதிதீவிர சிகிச்சை பிரிவுகளில் வைக்கப்பட்டுள்ளதாகவும் எனினும் ஆறு குழந்தைகளும் ஆரோக்கியமான நிலையில் உள்ளதாகவும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சிறுபிள்ளை வைத்திய நிபுணர் டாக்டர் திருமதி சித்திரா கடம்பநாதன் தெரிவித்தார்.
இதேவேளை குழந்தைகளை பிரசவித்தவரில் ஒருவரான தன்னாமுனையை சேர்ந்த மேகானந்தி சுதாகரனின் குடும்பம் வறுமையான நிலையில் உள்ளதால் அவருக்கு உதவ விரும்புவோர் முன்வரவேண்டும் என மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்திய நிபுணர் டாக்டர் எம்.திருக்குமார் தெரிவித்தார்.
குறித்த சிசுக்களின் தந்தை பாரிசவாத நோயினால் பீடிக்கப்பட்டுள்ளதனால் மூன்று குழந்தைகளையும் வளர்ப்பதில் கஷ்டத்தை எதிர்நோக்கியுள்ளார்.
உதவி செய்ய விரும்புவோர், மேகானந்தி சிதம்பரப்பிள்ளை, இலங்கை வங்கி - செங்கலடி கிளை, வங்கி கணக்கு இலக்கம் 2930242 மூலமாக உதவ முடியும். மேலும் இவ்விடயம் தொடர்பில் 0772894944 என்ற அலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
45 minute ago
47 minute ago