2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கிழக்கு பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்

Thipaan   / 2015 ஏப்ரல் 18 , மு.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித், ஏ.எச்.ஏ. ஹுஸைன்

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 2013 மற்றும் 2014ஆம் கல்வியாண்டுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள முதலாம் வருட புதிய மாணவர்களுக்கான விரிவுரைகள் எதிர்வரும் 27.04.2015ஆம்  திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக பல்கலைக் கழக சிரேஷ்ட உதவிப் பதிவாளர் ரி. பாஸ்கரன் தெரிவித்தார்.

கலை கலாசார பீடம், விவசாய பீடம், வர்த்தக முகாமைத்துவப் பீடம், விஞ்ஞானப் பீடம் போன்ற மேற்படி பீடங்களைச் சேர்ந்த சகல மாணவர்களும் 26.04.2015 அன்று பிற்பகல் 05.00 மணிக்கு முன்னர் கிழக்கு பல்கலைக்கழகம், வந்தாறுமூலை, செங்கலடி எனும் விலாசத்திற்கு சமுகமளிக்குமாறு சிரேஷ்ட உதவிப் பதிவாளர் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக மேலதிக விபரங்களுக்கு கிழக்கு பல்கலைக்கழகம் (பொது) 065-2240490, மாணவர் நலன்புரிச் சேவைகள் உதவிப் பதிவாளர் 065-2240731 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X