2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

நாகர் கல்வெட்டு சாசனம் கண்டுபிடிப்பு

Thipaan   / 2015 ஏப்ரல் 18 , மு.ப. 08:55 - 1     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வந்தாறுமூலை பிரதேசத்துக்கு மேற்கே நான்கு கிலோமீற்றர் தொலைவிலுள்ள கிடாக்குழி எனும் பிள்ளையார் ஆலயத்தில். இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நாகர் பற்றிய கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வந்தாறுமூலையைச் சேர்ந்த ஆசிரியரான செல்வநாயகம் பத்மநாதன். குறித்த ஆலயத்துக்கு சென்றிருந்த வேளை, ஆலயத்தின் முன் கிடந்த கல்லை அவதானித்தபோது இக்கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

கண்டு பிடிக்கப்பட்ட கல்வெட்டினை புகைப்படம் எடுத்து வரலாற்றுத்துறை பேராசிரியரும், யாழ். பல்கலைக்கழக வேந்தருமாகிய சி.பத்மநாதன் அவர்களிடம் காட்டப்பட்டது.

கல்வெட்டினை நேரடியாக ஆய்வு செய்வதற்காக கடந்த 08.04.2015 பேராசிரியர் சி.பத்மநாதன், வ.குணபாலசிங்கம், எஸ்.சுபாஸ்கரானந்தம் மற்றும் கிழக்கு பல்கழைக்கழக வரலாற்றுத்துறை மாணவன் தனராஜான் ஆகியோர் ஆய்வுக்காக சென்றிருந்தனர்.

கல்வெட்டிலுள்ள விடயங்களை ஆய்வு செய்வதற்காக கல்வெட்டு படி எடுக்கப்பட்டு பேராசிரியர் அவர்களால் கல்வெட்டில் எழுதப்பட்ட விடயங்கள் வாசிக்கப்பட்டது.

கல்வெட்டில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் பற்றி பேராசிரியர் பத்மநாதன் குறிப்பிடுகையில்,
இது இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுக்கு முற்பட்ட தமிழ் பிராமிக் எழுத்து வகை சாசனம் என்றும் இச்சாசனத்தில் வேள் நாகன் எனும் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

இங்கு வேள்  நாகன் எனும் நாமம் ஆனது குறு நில மன்னர்களை குறிப்பிடுகின்றது. இவர்கள் பேசிய மொழி தமிழ் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் மட்டக்களப்பில் பல பிரதேசங்களில் நாகர்கள் வாழ்ந்துள்ளார்கள் என்பதற்கு பல சாசனங்கள் கடந்த கால கட்டங்களில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதோடு அவற்றுள் இச்சாசனமும் ஒன்றாகுமென தெரிவித்தார்.

இலங்கையின் வரலாற்றைக் கூறும் மகாவம்சத்தில் பூர்வீக குடிகளாக இயக்கர், நாகர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

எனவே மட்டக்களப்பு பிரதேசத்தில் பல இடங்களில் நாகர் வாழ்ந்துள்ளனர் என்பதனை இச்சாசனமும் சான்று பகர்கின்றது.

 

 


You May Also Like

  Comments - 1

  • ரமேஷ் Sunday, 05 August 2018 07:36 AM

    நாகர் என்பவர்கள் தற்காலத்தில் வாழும் போயர்களே என்று ஆந்திர வரலாற்று ஆய்வாளர்கள் கூறுவது இவ்வரலாறா

    Reply : 0       1


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X