Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Sudharshini / 2015 ஏப்ரல் 18 , மு.ப. 05:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ. ஹுஸைன்
காத்தான்குடியில் அமைக்கப்பட்டுள்ள இஸ்லாமிய நூதனசாலையில் இஸ்லாத்துக்கு எதிரான மனிததர்களை ஒத்த உருவ சிலைகள் காணப்படுவது தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அதிருப்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக உலமாசபையின் பத்வாக்குழு இணைப்பாளர் எம்.ஏ.எம். ஹாரிஸ் ரஷாதி, காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பருக்கு கடிதமொன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.
அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
காத்தான்குடி முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதியாகும். அறிஞர்கள், துறைசார்ந்தவர்கள் அங்கு நிறைந்து காணப்படுவது சிறப்பம்சமாகும். கிழக்கிலங்கையில் மாத்திரமன்றி நாடளாவிய ரீதியில் இவ்வூர் விஷேடமாகக் கருதப்படுவது யாராலும் மறுக்க முடியாத உண்மையாகும்.
இந்நிலையில் மனிதர்களை ஒத்த உருவச்சிலைகளை உள்ளடக்கியதான நூதனசாலையொன்று அங்கு ஆரம்பிக்கப்படவிருப்பதாகவும் அது சம்பந்தமான மார்க்கத் தீர்ப்பைக் கோரியும் ஜம்இய்யாவின் காத்தான்குடிக் கிளை 21.03.2015ஆம் திகதி கடிதமொன்றை தலைமையகத்துக்கு அனுப்பி வைத்திருந்தது.
மேற்படி கடிதம் தொடர்பாக ஆராய அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பத்வாக்குழு கடந்த 26.03.2015 வியாழக்கிழமை ஒன்று கூடியது. அக்கூட்டத்தில் மேற்படி விடயம் ஆழமாக ஆராயப்பட்டதுடன் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதியமைச்சருமான அல்ஹாஜ் ஹிஸ்புல்லாவுக்கு, மேற்படி விடயம் தொடர்ப்பில் விளக்கி கடிதமொன்றை அனுப்பி வைப்பதாகவும் தீர்மானிக்கப்பட்டது.
குறித்த கடிதம் தயார் செய்யப்பட்டு அனுப்பும் தருவாயில், நகர முதல்வர் கடந்த 30ஆம் திகதி கடிதம் ஒன்றை அனுப்பி வைத்திருந்தார். அக்கடிதத்தில் குறித்த நூதனசாலையை அவசரமாகத் திறக்க வேண்டியுள்ளதால் இதனை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பத்வாக்குழு காத்தான்குடிப் பிரதேசத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டு ஷரீஆ அடிப்படையில் ஆலோசனைகளை வழங்குமாறு கேட்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பத்வாக்குழுவினால் அனுப்பப்படவிருந்த கடிதம் பிற்போடப்பட்டது.
கடந்த 08ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பத்வாக் குழுவினர் பல்வேறு வேலைப்பழுக்களுக்கும் மத்தியில் நூதனசாலையை நேரில் பார்வையிடுவதற்குத் தயாரான பொழுது, நகர முதல்வர் அவசரமாக இந்தியா செல்லவிருப்பதாகவும் ஞாயிற்றுக்கிழமை (12) நாடு திரும்பிய பின்னர் குறித்த நூதனசாலையைப் பார்வையிட ஏற்பாடு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், 15.04.2015 ஆம் திகதி புதன்கிழமை நூதனசாலையை மக்கள் பார்வைக்குத் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.
பொதுவாக முஸ்லிம்கள் உருவச் சிலைகளை வணங்கவோ, அவற்றைக் கண்ணியப்படுத்தவோ அல்லது ஞாபகச் சின்னங்களாக வைத்திருக்கவோ இஸ்லாம் அனுமதிக்கவில்லை. இது விடயத்தில் ஹதீஸ்களில் மிகக் கடினமான எச்சரிக்கைகள் வந்துள்ளன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஒவ்வொருவரும் மறுமை வாழ்வை முன்னிறுத்திச் செயல்படுவது அவசியம் என்பதை ஞாபகமூட்டிக் கொள்கிறோம். என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
46 minute ago
48 minute ago