2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

அலிகார் மகா வித்தியாலய குறைபாடுகளை நிவர்த்திப்பதாக கிழக்கு முதல்வர் வாக்குறுதி

Thipaan   / 2015 ஏப்ரல் 18 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

காத்தான்குடி பாலமுனை அலிகார் மகா வித்தியாலயத்தின் குறைபாடுகளை நிவர்த்திசெய்வதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் வாக்குறுதியளித்துள்ளார் என முதலமைச்சரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இது விடயமாக முதலமைச்சரின் ஊடகப் பிரிவு சனிக்கிழமை அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பாலமுனை அலிகார் மகா வித்தியாலயத்துக்கு அண்மையில் விஜயம்செய்த முதலமைச்சர், அப்பாடசாலையின் குறைநிறைகளைப் பற்றிக் கேட்டறிந்து கொண்டார்.

பாடசாலை நிர்வாகத்தினால் பாடசாலைத் தேவைகள் அடங்கிய மகஜரும் முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.

குறைகளை நேரில் பார்வையிட்டதுடன் பாடசாலைத் தேவைகள் குறித்த மகஜரையும் பெற்றுக் கொண்ட முதலமைச்சர் அவற்றை நிவர்த்தி செய்து தருவதாகவும் கல்விச் சமூகத்திடம் உறுதியளித்தார்.

இந்த விஜயத்தின் போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஷிப்லி பாறூக், அலிஸாஹிர் மௌலானா, கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் யூ.எல்.எம். முபீன் ஆகியோருடன் அரச உத்தியோகத்தர்களும் உடனிருந்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X