2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முழுப்பயிற்சி வழங்கப்படுகின்றது: வதிவிட பிரதிநிதி முஹமட் நவாஸ்

Princiya Dixci   / 2015 ஏப்ரல் 23 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா, எஸ்.பாக்கியநாதன்

மக்களின் பிரச்சினைகளை மக்கள் பிரதிநிதிகள், பிரதேச சபை அதிகாரிகள் இணைந்து தீர்வுகாண்பது என்பது தொடர்பில் முழுமையான பயிற்சிகள் வழங்கப்பட்டுவருவதாக சேர்ச் போ கொமன் அமைப்பின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான வதிவிட பிரதிநிதி முஹமட் நவாஸ் தெரிவித்தார்.

அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் உள்ள தெரிவுசெய்யப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பங்குபற்றிய நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்று போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நல்லாட்சிக்கான பிரஜைகள் தொடர்பான கருத்திட்டம் எனும் தலைப்பில் இந்த நிகழ்வு மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் வியாழக்கிழமை (23) நடைபெற்றது.

கிழக்கு மாகாண உள்ளூராட்சி மாகாண அமைச்சின் ஒத்துழைப்புடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் சேர்ச் போ கொமன் அமைப்பு இந்த செயற்றிட்டத்தினை முன்னெடுத்துவருகின்றது.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை.சலீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் அபிருத்தி மற்றும் கூட்டுறவு பணிப்பாளர் திருமதி லிபியுஸ், மட்டக்களப்பு உள்ளூராட்சி உதவி ஆணையாளர் கா.சித்திரவேல், அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஏ.ஜெ.எம்.இர்ஷாட் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் தெரிவுசெய்யப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டதுடன் இவர்களின் 20 உள்ளூராட்சி மன்றங்களுக்கு பொதுமக்கள் முறைப்பாடுகள் தெரிவிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள மென்பொருள்களும் கணினியும் வழங்கப்பட்டன.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய சேர்ச் போ கொமன் அமைப்பின் இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான விதிவிட பிரதிநிதி முஹமட் நவாஸ், மக்களின் பிரச்சினைகளை தீர்த்துவைப்பதென்ற நோக்கத்தினை அடைவதற்கு இன்று நாங்கள் சரியான பாதையில் பயணித்துக்கொண்டிருக்கின்றோம்.

சம்பந்தப்பட்ட அனைவரும் இணைந்து தீர்வினைக்காண்பதே எமது நோக்கமாகும். வெறுமனே சட்டரீதியான தீர்வைப்பெறுவதற்கு அப்பால் பிரச்சினைகளுக்கு நடைமுறை ரீதியான யதார்த்தமான தீர்வினைக்காண்பது தொடர்பில் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவேண்டும்.

பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் அறிவுசார்ந்த செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையில் 71 சிவில் அமைப்புகள், மக்கள் பிரதிநிதிகள்; 110 பேர், அரச உத்தியோகத்தர்களுக்கு 90 பேர் உள்ளிட்டோருக்கு ஆறு மாவட்டங்களில் பயிற்சிகளை வழங்கியுள்ளோம்.

மக்களுக்கும் பிரதேச சபைளுக்கும் இடையே புரிந்துணர்வையும் தொடர்பினையும் ஏற்படுத்தி குறைபாடுகளை அறிந்து உதவும் வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும்.

பிரதேச சபைகளுக்கும் மக்களுக்கும் இடையிலான நெருக்கத்தினை வளர்க்கவேண்டும். அதற்கான பணிகள் முன்னெடுக்கப்படவேண்டும்.

பிரதேசங்களில் அடையாளம் காணப்படும் பிரச்சினைகளையும் அவற்றினை அடையாளப்படுத்தி மேற்கொள்ளப்படும் திட்டமிடல் பணிகளுக்கும் உதவுவதற்கு நாங்கள் தயாராகவுள்ளோம் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .