2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

பிரதேச வேறுபாடின்றி செயற்படுவோன்: சேகு அலி

Suganthini Ratnam   / 2015 ஏப்ரல் 24 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

பிரதேச வேறுபாடின்றி செயற்படுவேன் என மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.ஐ.சேகுஅலி தெரிவித்தார்.

காத்தான்குடி அல்மனார் நிறுவனம் நேற்று வியாழக்கிழமை மாலை மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் புதிய வலயக் கல்விப்பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள  எம்.ஐ.சேகு அலிக்கு வழங்கிய வரவேற்பு வைபவத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் புதிய வலயக் கல்விப்பணிப்பாளராக கடமைகளை பொறுப்பேற்றுள்ள நான், இந்த கல்வி வலயத்தின் முன்னேற்றத்திற்காக பிரதேச வேறுபாடின்றி செயற்படுவேன்.

காத்தான்குடி ஏறாவூர் ஓட்டமாவடி பிரதேசங்களை உள்ளடக்கிய இந்த கல்வி வலயத்தில் எனக்கும் இந்த மூன்று பிரதேசங்களுக்கும் நிறையவே தொடர்புகள் உள்ளன. கல்வி மேம்பாட்டிற்காக அயராது பாடுபடுவேன். எதிர்காலத்தில் நல் ஒழுக்கமுள்ள பண்பாடுள்ள நாகரிகமுள்ள ஒரு சமுதாயமாக மிளிரவேண்டும். இதுவே எனது அவாவாகும்.

தற்போது மனிதன் தன்னைப் பற்றி தன்னிடமுள்ள குறைகளைப்பற்றி சிந்திக்காது, பிறருடைய குறைகளையே தேடித்திரிகிறான் இந்நிலைமாறவேண்டும்.

நிரந்தர அமைதியையும் சமாதானத்தையும் கட்டிக்காக்க நாம் அனைவரும் ஒற்றுமையுடன் செயற்படவேண்டும்.
சமூகங்களுக்கிடையில் ஐக்கியத்தையும் இன நல்லுறவையும் ஏற்படுத்த நான் அனைவரும் பாடுபடவேண்டும்.

தற்போதைய காலத்தில் ஆன்மிக கல்வி உலக கல்வி இரண்டையும் சேர்த்தே கற்கவேண்டியுள்ளது. அதற்கு ஜாமியா நளீமியா நல்ல உதாரணமாகும். மாணவர்கள் இவ்வாறு கற்கும்போது தான் சரியான இலக்கினை அடைவர். இந்த வகையில் இந்த இலக்கினை அடைய இந்த அல்மனார் கல்வி நிறுவனம் சிறப்பாக செயற்பட்டு வருவதையிட்டு எனது பாராட்டுக்களை தெரிவிக்கின்றேன்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .