2025 ஜூலை 14, திங்கட்கிழமை

மாணவர்களுக்கான சுகாதார பரிசோதனைகள்

Gavitha   / 2015 ஏப்ரல் 25 , மு.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களின் உடல் நலம் தொடர்பாக, மட்டக்களப்பு பொது சுகாதார பரிசோதகர்களினால் பரிசோதிக்கப்பட்டு அதற்கான தீர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றது.

இதன் கீழ் வெள்ளிக்கிழமை (24) காலை மட்டக்களப்பு ஊறணி சரஸ்வதி வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் தலைமையில் பொது சுகாதார பரிசோதகர்களினால் தரம் 01,04,07,10 ஆகிய மாணவர்களுக்கான சுக நல பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்போது, மாணவர்களுக்கு கண், காது, பற்கள், உயரம், நிறை என்பன பரிசோதிக்கப்பட்டு நோய்களுக்கான தடுப்பூசிகளும் மருந்துகளும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு பொது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக மேலதிக வைத்திய அதிகாரி திருமதி கே. மதனழகன், மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பொது சுகாதார பரிசோதகர் கே.ஜெயரஞ்சன், வெட்டுக்காடு பொது சுகாதார பரிசோதகர் அமுதமாலன், பொது சுகாதார தாதிய உத்தியோகஸ்தர்கள் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக தாதிய பயிற்சி மாணவர்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது, கிழக்கு பல்கலைக்கழக தாதிய பயிற்சி மாணவர்களினால் பாடசாலை மாணவர்களுக்கு பற் சுகாதாரம் தொடர்பான அறிவுரைகளும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .