2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

உங்களது குறைகளை முகநூலினூடாக தெரிவிக்கவும்: நஸீர்

Gavitha   / 2015 மே 02 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

கிழக்கில் உள்ள ஒவ்வொரு பொதுமகனும் தனது குறைகளை நேரடியாக என்னிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறேன். அந்த வகையில்; தனிப்பட்ட முறையில் ஒருவர் தனது பிரச்சினைகளை தெரியப்படுத்த வேண்டுமாயின் எனது முகநூல் பக்கத்தினூடாக முறையிடலாம் என மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

தனிப்பட்ட முறையில் ஒருவர் தனது பிரச்சினைகளை தெரிவிப்பதாக இருந்தால், எனது முகநூல் பக்கமான
( https://www.facebook.com/pages/Nazeer-Ahamed-CM/423959844449548?fref=ts ) என்ற முகவரியினூடாக முறையிடலாம். நேரடியாக அதற்கு பதில் சொல்ல தயாராக இருக்கிறேன்.

மக்களின் குறைகளைக்கேட்டறிதல் மற்றும் இதர சேவைக்காக பணிக்கப்பட்டவர்கள் உங்கள் அழைப்பை புறக்கணித்தால்,  முகநூல் பக்கத்தில் முறையிடலாம் சகல முறையிலும் மக்களின் குறைகளைக் கேட்டறிய பலவழிகளை மேற்கொண்டுள்ளேன்.

இனிவரும் காலங்களில் கிழக்கில் பெண்கள் யாரும் வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களாகச் செல்லக் கூடாது  என்பதனை 100வீதம் நிலைநாட்ட வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழில் நிலையங்களை நிறுவி வருகிறேன்.

வேலையற்ற இளைஞர், யுவதிகளுக்கு வருமானமீட்டும் வகையில் தொழில் வழங்க ஆயத்தமாக இருக்கிறேன்.

அந்தவகையில் 20 ஆயிரம் இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்க தீர்மானித்துள்ளேன்.
எனது அலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியாத பட்சத்தில்;, உடனே மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் முகமாக நியமிக்கப்பட்ட குழுவினரிடம்; தொடர்பு கொள்ள முடியும்.

அந்த வகையில் திருகோணமலையில் தொடர்பு கொள்ள விரும்புபவர்கள்:

திருகோணமலை காரியாலயம்- 0262226055
முதலமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர்
கே.பத்மநாதன் - 0773816364முதலமைச்சரின் இணைப்புச் செயலாளர்
எஸ்.எம்.எஸ்.எம்.சரூஜ்- 0771051075

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்பு கொள்ள விரும்புபவர்கள்:

ஏறாவூர் காரியாலயம்- 0652241051
முதலமைச்சரின் ஏறாவூருக்கான இணைப்பாளர்
நாஸர் மாஸ்டர் -0779638663
முதலமைச்சரின் ஊடகப்பிரிவு
ஏ.ஜெயராஜ்- 0773557675

அம்பாறை மாவட்டத்தில் தொடர்பு கொள்ள விரும்புபவர்கள்:

முதலமைச்சரின் இணைப்புச் செயலாளர்:
எஸ்.எல்.எம்.பழீல் பி.ஏ. -0774237236
முதலமைச்சரின் ஊடக இணைப்பாளர்:
எஸ்.எல்.முனாஸ் -0771276680
கொழும்புக் காரியாலயம்- 0112300488
முதலமைச்சரின் ஊடகப்பிரிவு
ஏ.எம்.மஹ்சூம் -0770125299

இவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ளலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .