2025 ஜூலை 10, வியாழக்கிழமை

வாவியில் குதித்தவர் சடலமாக மீட்பு

Thipaan   / 2015 மே 02 , மு.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா. ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடிப் பாலத்திலிருந்து வாவிக்குள் குதித்த இளைஞர், இன்று சனிக்கிழமை(02) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக  காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு கல்லடி டச்பார் வீதிப்பக்கமாகவுள்ள வாவியிலிருந்து இவரின் சடலம் மீகப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு திருச்செந்தூர் 2ஆம் குறுக்கு வீதியைச் சேர்ந்த ஞானமணி விஜித்திரகுமார் (வயது 22) என்ற இளைஞரே கல்லடி, நேற்று வெள்ளிக்கிழமை மாலை வாவிக்குள் பாய்ந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மத்திய கிழக்கு நாடொன்றுக்கு தொழில் வாய்ப்புப் பெற்றுச் சென்றிருந்த இந்த இளைஞர் இரண்டு வாரங்களுக்கு முன்னர்தான் நாடு திரும்பியிருந்தார் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை  காத்தான்குடி  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .