2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

இலவச சிங்கள மொழி வகுப்புக்கள் ஆரம்பம்

Gavitha   / 2015 மே 02 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

தமிழ் மொழி மாத்திரம்; தெரிந்தவர்களுக்கு இலவசமாக சிங்கள மொழி வகுப்புக்களை ஆரம்பித்திருப்பதாக ஏறாவூர் அல்-அறபா இளைஞர் கழகச் செயலாளர் ஐ.எம். சஜீர் தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை (01) ஆரம்பிக்கப்பட்ட இந்த இலவச சிங்கள மொழி வகுப்பில் இணைந்து கொள்ள சுமார் 100 பேர் தமது பெயர்களைப் பதிவு செய்து கொண்டனர்.

இலங்கையில் இன ஐக்கியத்துக்கு மொழி ஒரு தடையாக இருந்து விடக் கூடாது என்பதால் தமது கழகத்தினூடாக முற்றிலும் சேவை அடிப்படையில் இந்த வகுப்புக்களை ஆரம்பித்துள்ளோம் என்று தெரிவித்தார்.

இதில் அனேகமானோர் அரச உத்தியோகஸ்தர்களாகவும் அதிலும் பெண்களே சிங்கள மொழி கற்பதில் அதிகம் ஆர்வம் காட்டிவருகின்றனர் என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .