2025 ஜூலை 10, வியாழக்கிழமை

ஸாஹிரா பாடசாலைக்கு சவுதி பிரமுகர்கள் விஜயம்

Gavitha   / 2015 மே 02 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி ஸாஹிரா விஷேட தேவை உடையோர் பாடசாலைக்கு வெள்ளிக்கிழமை (01) விஜயம் செய்த சவுதி அரேபியாவைச் சேர்ந்த பிரமுகர்கள், அம்மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள், அமைப்பின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து கேட்டறிந்தனர்.

இதன்போது நலன்புரி அமைப்பின் நிர்வாக உறுப்பினர்களையும் பாடசாலை முகாமையானரையும் சந்தித்து மாணவர்களின் கல்வி, தொழிற்கல்வி, உணவு, உடை, இருப்பிடம், மருத்துவம் உட்பட பல்வேறு தேவைகள் குறித்து கலந்துரையாடினர்.

இதில் சவுதி அரேபியாவைச் சேர்ந்த அபூசாலிஹ் அத்தாவூத், அல் கஸீம் பிரதேசத்தைச் சேர்ந்த அஹ்மத் அத்துபைஹ், காஸிம் சம்ரி ஆகியோருடன் ஸ்ரீலங்கா ஹிறாபவுன்டேசன் நிறுவனத்தின் சர்வதேச விவகாரங்களுக்கான செயலாளர் ஏ.எல்.எம். மும்தாஸ் மதனி மற்றும் பலர்; கலந்துகொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .