2025 ஜூலை 10, வியாழக்கிழமை

மட்டு., திருமலையில் சோதனை; 41 பேர் கைது

Suganthini Ratnam   / 2015 மே 06 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் சட்டவிரோதமாக கசிப்பு தயாரித்தமை,   மதுபானம் வைத்திருந்த மற்றும் விற்பனை செய்தமை, கஞ்சா வைத்திருந்தமை ஆகிய  குற்றச்சாட்டுக்களின் பேரில் 41 பேர் கைதுசெய்யப்பட்டதாக அந்தந்த மாவட்ட மதுவரித் திணைக்களங்கள் தெரிவித்தன.  

வெசாக் வாரத்தையொட்டி மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் அந்ததந்த மாவட்ட மதுவரித் திணைக்கள அதிகாரிகள்  திடீர்ச் சோதனை மேற்கொண்டனர். இதன்போதே மேற்படி 41 பேரும்   கைதுசெய்யப்பட்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும்; கடந்த முதலாம் திகதியிலிருந்து செவ்வாய்க்கிழமை (05)வரை  மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, சட்டவிரோதமாக மதுபானம்  வைத்திருந்த மற்றும் விற்பனை செய்த, கஞ்சா வைத்திருந்த  குற்றச்சாட்டுக்களின் பேரில்   20 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

இந்தச் சோதனையின்போது, நூற்றுக்கணக்கான மதுபானப் போத்தல்களும் சுமார் 20 லீற்றர் கசிப்பும் கைப்பற்றப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட மதுவரித் திணைக்கள பொறுப்பதிகாரி எஸ்.தங்கராஜா தெரிவித்தார்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான், சுங்காகேணி ஆகிய பகுதிகளிலும் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பலவத்தை பகுதியிலும் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நொச்சிமுனை, ஆரையம்பதி, நாவற்குடா, கிரான்குளம் ஆகிய பகுதிகளிலும் வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கன்னன்குடா  பகுதியிலும்  மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திராய்மடு பகுதியிலும்  சட்டவிரோத மதுபான நிலையங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இது இவ்வாறிருக்க,  கஞ்சா விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் காத்தான்குடி பிரதேசத்தில் இருவர் கைதுசெய்யப்பட்டதுடன்,  இவர்களிடமிருந்து கஞ்சா கைப்பற்றப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, திருகோணமலை மாவட்டத்திலுள்ள 21 இடங்களில்  அம்மாவட்ட மதுவரித் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின்போது,   21 பேர்; கைதுசெய்யப்பட்டதாக  திருகோணமலை மாவட்ட மதுவரித் திணைக்கள அத்தியட்சகர் நடராஜா சுசாதரன் தெரிவித்தார்.

சேருவில உள்ளிட்ட  பகுதிகளில் இச்சோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .