2025 மே 17, சனிக்கிழமை

மழை காரணமாக மட்டக்களப்பு மீனவர்களின் வாழ்வதாரம் பாதிப்பு

Gavitha   / 2015 மே 11 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். பாக்கியநாதன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடுமையான கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மீன்பிடி நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன. கல்லடி, புதிய காத்தான்குடி, ஏத்துக்கால், பூநொச்சிமுனை, பாலமுனை, நாவலடி, பாலமீன்மடு உட்பட பல இடங்களில் கடற்றொழில் நடவடிக்கைகள் முற்றாக செயலிழந்துள்ளன.

இதனால் கடல் மீன்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடற்றொழிலாளர்கள் தமது படகுகளையும் வள்ளங்களையும் கரையிலிருந்து நீண்ட தூரத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.

இம்மாவட்டத்தில் சுமார் 26 ஆயிரம் குடும்பங்கள் கடற்றொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இம்மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (10) முதல் கடும் மழை பெய்துள்ளது. 24 மணிநேரத்தில் 19.2 மில்லிமீற்றர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .