2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

ட்ரக் விபத்தில் சாரதி காயம்

Gavitha   / 2015 மே 11 , மு.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள காயான்குடாவில் திங்கட்கிழமை (11) நண்பகல் இடம்பெற்ற விபத்தில் ட்ரக் வண்டிச் சாரதியொருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆற்றுமணல் ஏற்றி இறக்குவதில் ஈடுபட்டிருந்த இரு ட்ரக் வண்டிகள் நேருக்கு நேர் மோதியதனாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சித்தாண்டி - 3 பிரிவைச் சேர்ந்த ஏ. சந்திரகுமார் (வயது 32) என்பவரே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கூமாச்சோலை - காயான்குடா வீதியில் ஆற்றுமணல் ஏற்றியிறக்கும் ட்ரக் சாரதிகள், வீதி ஒழுங்குகளை மீறி வழமையாக மாணவர்கள் மற்றும் தெருப் பயணிகளுக்கு அச்சம் ஏற்படுத்தும் விதத்தில் வாகனத்தைச் செலுத்துவதாக கிராம மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .