Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Gavitha / 2015 மே 11 , பி.ப. 12:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
இனவாத சக்திகளின் நெருக்கடிக்குள் சிக்கியுள்ள எமது கட்சியின் தலைமையை பாதுகாக்க ஒட்டுமொத்த வடபுல முஸ்லிம்களும் ஒன்றுபட வேண்டுமென கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கொள்கை பரப்புச் செயலாளருமான எம்.எஸ் சுபையீர் தெரிவித்தார்.
வில்பத்து சம்மந்தமாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுத்தீனுக்கு எதிராக பரவலாக பேசப்படும் கருத்துக்கள் தொடர்பில் திங்கட்கிழமை (11) வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வடபுல முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் தொடர்பில் அதிகமாகக் குரல் கொடுத்து பல சவால்களுக்கு மத்தியில் பணியாற்றிவரும் எமது கட்சியின் தலைமைக்கு எதிராக காழ்புணர்வு கொண்ட இனவாத தீய சக்திகளின் பின்னணியில் செயற்படும் சில ஊடகங்கள் போலியான குற்றச்சாட்டுக்களை சுமத்தி அண்மைக்காலமாக தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன.
இவ்வாறு எமது தலைமைக்கும் முஸ்லிம் சமூகத்துக்கும் எதிராக தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்களின் உண்மைத்தன்மையை தெளிவுபடுத்தி எந்தவொரு வடபுல அரசியல்வாதிகளோ, சிவில் சமூகமோ குரல் கொடுக்காமை எமக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சில இனவாத அமைப்புக்கள் இலங்கை முஸ்லிம்கள் மீது அண்மைக்காலமாக பல தாக்குதல்களை மேற்கொண்டன.
இந்தவேளையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைமை மாத்திரமே சமூகத்துக்காக தைரியமாக நின்று குரல் கொடுத்ததனை முழு சமூகமும் அறிந்த விடயமே.
1990ஆம் ஆண்டு வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் தங்களது வாழ்விடங்கள் மற்றும் சொத்துக்களை இழந்து அல்லல் படும் நிலமைகளை கருத்திற்கொண்ட எமது கட்சியின் தலைமை அம்மக்களை மீளக்குடியமர்த்தி அவர்களுக்கான அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்துவருகின்றன.
இவ்விடயத்தில் உள்நாட்டு, வெளிநாட்டு அரச சட்ட திட்டங்களுக்கு அமைவாக பல மாநாடுகளை நடாத்தி வடபுல மக்களின் மீள் குடியேற்ற விடயத்தில் அதிக அக்கரை செலுத்தி வருகின்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
5 hours ago
5 hours ago