Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2015 மே 11 , பி.ப. 02:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.எல்.ரியுதாஜித்
மட்டக்களப்பு மாநகர சபை தீயணைப்பு படையினரின் துணிச்சல் மிக்க சேவையை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு புனித மிக்கேல் கல்லூரியில் இன்று திங்கட்கிழமை (11) காலை நடைபெற்றது.
மட்டக்களப்பு புனித மிக்கேல் தேசிய பாடசாலையில் கடந்த 07.05.2015 அன்று பாடசாலை சிற்றுண்டிச்சாலையில் தீ ஏற்பட்டுள்ளதாக ஆணையாளர் மா. உதயகுமாருக் அறிவிக்கப்பட்டது.
உடனடியாக ஆணையாளர் மட்டக்களப்பு மாநகர சபையில் தீயணைப்புப் பிரிவினருடன் ஸ்தலத்துக்கு விரைந்து ஏற்படவிருந்த பாரிய தீ அனர்த்தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
மேற்படி துணிச்சல்மிக்க செயலை பாராட்டி கௌவிக்கும் முகமாக புனித மிக்கேல் கல்லூhயின் காலை ஒன்று கூடலின் போது அதிபர் வெஸ்லியோ வாஸ் தலைமையில், தீயணைப்பு படையினர் கௌரவிக்கப்பட்டனர்.
இதன் போது, மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் மா.உதயகுமார், பிரதி ஆணையாளர் நா.தனஞ்செயன், சமூக சுகாதார உத்தியோகத்தர் வி.பிரதீபன் மற்றும் தீயணைப்புப் பிரிவு உத்தியோகத்தர்களான கே.அன்ரனிதாஸ், ரி.ஜவனராஜன், எம்.சந்திரகாந்தன், ரி.ஜவனராஜன் ஆகியோர் அவர்களின் துணிச்சல்மிக்க செயலைப் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
2 hours ago
6 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
9 hours ago
9 hours ago