Thipaan / 2015 மே 12 , மு.ப. 05:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன், கே.எல்.ரி.யுதாஜித், எம்.எம்.அஹமட் அனாம்
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மவட்டத்தின் வாகரைப் பிரதேச இளைஞர் யுவதிகளுக்கான கணினிப் பயிற்சி நெறி, திங்கட்கிழமை(11) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பிரதேச செயலாளர் செல்வி எஸ். ஆர் ராகுலநாயகி தலைமையில் வாகரை தொழில் பயிற்சி நிலையத்தில் இடம்பெற்ற அங்குரார்ப்பண நிகழ்வில், 39 இளைஞர் யுவதிகள் பயிற்சி நெறியில் இணைந்து கொண்டனர்.
சர்வதேச அரச சார்பற்ற தொண்டு நிறுவனமான வேர்ள்ட் விஷனின் அனுசரணையில் இலவச கணினிப் பயிற்சி நெறி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் முகாமையாளர் வொனி வின்சன்ற் தெரிவித்தார்.
ஆறு மாதகால முழு நேர பயிற்சியாக இப்பயிற்சி நெறி திட்டமிடப்பட்டுள்ளதென்றும் அவர் கூறினார்.
மேலும், பயிலுநர்களுக்கு இலவச போக்குவரத்து வசதி அத்துடன் விரிவுரையாளருக்கான கொடுப்பனவையும் உலக தரிசன நிறுவனம் வழங்குமென்று அவர் கூறினார்.
அங்குரார்ப்பண நிகழ்வில், பிரதேச செயலாளர் செல்வி எஸ்.ஆர் ராகுலநாயகி, வேர்ள்ட் விஷன் நிறுவன முகாமையாளர் வொனி வின்சன்ற், பிரதேச செயலக திட்டமிடல் உதவிப் பணிப்பாளர் ஆர். கெங்காதரன், சிரேஸ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் என். கருணைநாதன், உலக தரிசன நிறுவன அலுவலர்களான ஜே. சரோன், ஆர். மஹிந்தன், பயிற்சி வளவியலாளர் டீ. கோபி ஆகியோரும் பயிலுநர்களான இளைஞர் யுவதிகளும் கலந்து கொண்டனர்.


4 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago