Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Kogilavani / 2015 மே 12 , மு.ப. 05:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
கிழக்கு மாகாண முதலமைச்சரின் அறிவுறுத்தல் வரும்வரை, வரி அதிகரிப்புக்கு முன்பிருந்த வரியை மட்டும் செலுத்துமாறு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் காத்தான்குடி மக்களிடம் கோரியுள்ளார்.
காத்தான்குடி நகரசபை எல்லைக்குட்பட்ட காணிகள், வீடுகள், வியாபார ஸ்தாபனங்களுக்கு திடீரென இவ்வாண்டுக்கான (2015) வரி 4 தொடக்கம் 5 மடங்காக அதிகரிக்கப்பட்டமையானது மக்களுக்கு பாரிய வரிச்சுமையாக காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
'வரிகள் திடீரென பன்மடங்காக அதிகரிக்கப்பட்டதனால் வறுமை கோட்டின்கீழ் வாழும் மக்கள், அன்றாடம் பிழைப்பு நடத்தி தமது சீவியத்தை கொண்டுசெல்லும் மக்கள், சிறுவியாபாரங்களில் ஈடுபட்டுள்ள மக்கள் என அனைத்து தரப்பினரும் பாரிய அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.
இவ்விடயம் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் ஹாபீஸின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதை தொடர்ந்து, இவ்வரி அதிகரிப்பு அறவீட்டை நிறுத்துமாறு காத்தான்குடி நகரசபைக்கு அவர் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இக்கடிதத்துக்கு பதிலளித்த கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர்,
வரி அறவீட்டில் மாற்றம் செய்வதென்றால் நகரசபைகள் கட்டளைச் சட்டத்தின் 160-(3)ஆம் பிரிவுக்கு அமைவாக முதலமைச்சரின் அனுமதியை பெறவேண்டும். ஆனால் காத்தான்குடி நகரசபை அவ்வாறான அனுமதியை பெறவில்லை.
முதலமைச்சரின் அனுமதியை பெறும்வரை குறித்த வரி அறவீடுகளை தாமதப்படுத்துமாறு உள்ளூராட்சி திணைக்களம் ஊடாக காத்தான்குடி நகரசபைக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago