Suganthini Ratnam / 2015 மே 13 , மு.ப. 05:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
சிறுவர்களுக்கு ஏற்படும் விபத்துக்களை குறைப்பதற்கான சமூகமட்ட செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்டம் இரண்டாவது பிரிவு உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பி.எம்.எம்.திஸாநாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள், போக்குவரத்துப் பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரிகளுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு, சத்துருக்கொண்டான் பயிற்சிப் பாடசாலையில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
பாதை ஒழுங்கு விதிகள் மற்றும் சிறுவர்களால் அனுசரிக்கப்பட வேண்டிய போதனைகளை வினைத்திறனுள்ள மட்டத்தில் விஸ்தரிப்பது குறித்து இங்கு ஆராயப்பட்டன.
இலங்கையில் பொதுவாக பாதை நடைமுறைகளை பெரியோர், சிறியோர் எவருமே பின்பற்றாததால், நாளாந்தம் அதிக விபத்துக்கள் சம்பவிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வீதியோரத்தில் நடக்கும்போது, எதிரே வரும் வாகனங்களும் இன்னபிற போக்குவரத்துச் சாதனங்களும் கண்ணுக்குத் தெரியும் படியாக நடந்துசெல்வதே அறிவார்ந்ததும் சட்டரீதியான பயணமுமாகும். அதற்காக பாதசாரிகள் பாதையில் தமது வலப்பக்கத்தை பயன்படுத்த வேண்டும். ஆனால், இலங்கையில் இந்த பாதை ஒழுங்கு முறையை பெரும்பாலானோர் பின்பற்றுவதில்லை என்றும் அவர் கூறினார்.
இவை தொடர்பில் முதலில் பாடசாலைச் சமூகத்துக்கு அறிவூட்டப்பட வேண்டும் என்ற முடிவு இந்தக் கருத்தரங்கில் எட்டப்பட்டது. அதற்கமைய, பாடசாலை மட்டத்திலிருந்து ஆசிரியர்களும் மாணவர்களும் பயிற்றுவிக்கப்படவுள்ளார்கள்.
சிறுவர் விபத்துக்களை குறைக்கும் சமூகமட்டத்திலான இந்த செயற்றிட்டத்தை யுனிசெப் நிறுவனமும் சர்வோதய இயக்கமும் அமுலாக்கம் செய்யவுள்ளதாக சர்வோதய இயக்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் ஈ.எல்.அப்துல் கரீம் தெரிவித்தார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை அபிவிருத்திக்கான ஒன்றிணைவு திட்டத்தின் கீழ் இச்செயற்றிட்டம் அமுலாக்கப்படவுள்ளது.
இதில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் அதிகாரி எச்.டி.பி.கே.ஹெற்றியாராச்சி, பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள், போக்குவரத்துப் பொலிஸ் அதிகாரிகள், சர்வோதய இயக்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் ஈ.எல்.அப்துல் கரீம், யுனிசெப் நிறுவனப் பிரதிநிதிகள். சர்வோதய சிறுவர் பாதுகாப்பு கண்காணிப்பு வெளிக்கள இணைப்பு உத்தியோகத்தர் பத்மா சந்திரகுமார உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
20 minute ago
23 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
23 minute ago
26 minute ago