2025 மே 17, சனிக்கிழமை

காட்டு யானைகளின் தொல்லையால் குகனேசபுரம் கிராம மக்கள் சிரமம்

George   / 2015 மே 13 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் புனானை கிழக்கு கிராம சேவகர் பிரிவில் உள்ள குகனேசபுரம் கிராம மக்கள் தினமும் யானைகளின் தொல்லையால் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
குகனேசபுரம் கிராமத்துக்குள் திங்கட்கிழமை இரவு புகுந்த யானைகள் அப்பகுதியில் உள்ள ஏழு வீட்டுத்தோட்டங்களை சேதப்படுத்தியுள்ளதுடன் ஒரு வீட்டின் முன்பகுதியையும் சேதப்படுத்தியுள்ளது.

வீடுகளில் வீட்டு உரிமையாளர்கள் உறக்கத்தில் இருந்த போதும் அவர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.  

வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள குகனேசபுரம் கிராமம் ஒரு மீள் குடியேற்ற கிராமமாகும்.

இக் கிராம மக்கள் இப்பகுதியில் மீள் குடியேற்றப்பட்டு ஒன்பது வருடங்களைக் கடந்துள்ள நிலையிலும் தங்களது குடியிருப்புக்களில் செய்கை பண்ணப்பட்ட நீண்டகாலப் பயிர் மற்றும் வீட்டுத் தோட்டங்களை யானைகள் அழித்துவிடுவதால் தாம் பல்வேறு துன்பங்களுக்கு முகங்கொடுப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

தங்கள் கிராமத்தினை யானைகளின் தொல்லையில் இருந்து பாதுகாத்துத் தருமாரும் அதற்கு உரிய நடவடிக்கைகளை சம்மந்தப்பட்ட அதிகாரிக் முன்னெடுன்னNவுண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .