2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

பிரதேச செயலக நுழைவாயிலை மூடி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

Thipaan   / 2015 மே 13 , பி.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம், ஆர்.ஜெயஸ்ரீராம்

கோறளைப்பற்று பிரதேச செயலகத்;துகு முன்பாக பிரதேச செயலக நுழைவாயிலை மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மீராவோடை தமிழ் கிராம மக்கள், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.யோகேஸ்வரன் மற்றும் ஏறாவூர் வாழைச்சேனை ஆகிய பிரதேசங்களுக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் இஹலவெல ஆகியோர் கொடுத்த வாக்குறுதியை அடுத்து பகல் 12.30 மணியளவில் கலைந்து சென்றனர்.

கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மீறாவோடை தமிழ் கிராம சேவகர் பிரிவில் உள்ள தமிழ் மக்களே இன்று (13) காலை, இரண்டாவது தடவையாகவும் கோறளைப்பற்று பிரதேச செயலகத்துக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரதேச செயலகத்துக்கு உள்ளே எவரையும் செல்ல விடாமலும் உள்ளிருந்தவர்களை வெளியே வர விடாமலும் இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தங்களது காணிகளை அயல் கிராமங்களில் உள்ள சில முஸ்லிகள் சட்டவிரோதமாக கைப்பற்றி வருவதாகவும் அதற்கு தீர்வு பெற்றுத்தருமாறு கோரி  இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை இரண்டாவது தடவையாக நடத்தினர்.

கோறளைப்பற்று பிரதேச செயலகத்தினால் 62 தமிழ் குடும்பங்களுக்கு  குடியிருப்புக் காணிக்குரிய காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

எனினும் அதில் தங்களை குடியேறி இருப்பதற்கு அயல் கிராமமான மீறாவோடை மற்றும் ஓட்டமாவடி பிரதேசத்தைச் சேர்ந்த சில முஸ்லிம்கள் தடையாக இருப்பதாகவும் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்து கடந்த 5ஆம் திகதி இக்கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

பிரதேச செயலகத்தின் சார்பில் செய்யப்பட்;ட முறைப்பாடு தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் வாழைச்சேனை பொலிஸார் கூறியதாவது,


வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கோறளைப்பற்று பிரதேச உதவி பிரதேச செயலாளரினால் இக்காணிப் பிரச்சினை தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டு வாழைச்சேனை நீதி மன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அது தொடர்பான வழக்கு எதிர்வரும் 22.06.2015 அன்று வாழைச்சேனை நீதிமன்றத்தில் இடம்பெறவுள்ளதாகவும் இது தொடர்பான தீர்வு நீதிமன்றத்தின் கிடைக்கும் வரை இரு சாராரும் குறித்த காணிகளுக்குள் செல்வதற்கு அனுமதியளிக்கப்படமாட்டாது.

அதனை மீறி குறித்த காணிகளில் எவராவது அத்துமீறி வேலைகள் செய்தால் பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் பொது மக்களுக்கு கொடுத்த வாக்குறிதியையடுத்து அம் மக்கள் அவ்விடத்தில் இருந்து கலைந்து சென்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் தங்களது கோரிக்கை மகஜரினை கோறளைப்பற்று பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் ஏ.நவேஸ்வரனிடம் வழங்கி வைத்தனர்.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X