Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2015 மே 14 , மு.ப. 03:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
கிழக்கு மாகாணசபை அமர்வு நேற்று புதன்கிழமை (13) நடைபெற்றபோது, சாய்ந்தமருது பிரதேச சபையை உருவாக்குவதற்கான பிரேரணை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.எம்.ஜெமீலினால் முன்வைக்கப்பட்டது.
இருப்பினும், இது சம்பந்தமாக விரிவான விவாதம் இடம்பெறுவதற்கு சபையில் கோரமில்லாததால் எதிர்வரும் 26ஆம் திகதிக்கு சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்படுவதாக மாகாணசபை தவிசாளர் சந்திரதாஸ கலபதி அறிவித்தார்.
கிழக்கு மாகாணசபை அமர்வு நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை (12) நடைபெறவிருந்தது. அன்றையதினம் ஏற்பட்ட மின்தடை காரணமாக இந்த அமர்வு ஒத்திவைக்கப்பட்டு, நேற்று புதன்கிழமை (13) நடைபெற்றது.
இந்த அமர்வின்போது ஆளும் கூட்டமைப்பைச் சேர்ந்த 17 உறுப்பினர்களே சமுகமளித்ததாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஊடகப்பிரிவு இணைப்பாளர் எஸ்.எல்.முனாஸ் தெரிவித்தார். அத்துடன், எதிர்க்கட்சி சார்பில் உறுப்பினர் இம்ரான் மஹ்றூப் பிரசன்னமாகியிருந்தார்.
இதற்கிடையில், கிழக்கு மாகாணசபை அமர்வு ஆரம்பமாவதற்கு முன்னராக மாகாணசபைக்கு முன்பாக வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டத்தில்; ஈடுபட்டனர்.
நான்கு வருடங்களாக வேலையற்றிருக்கும் தங்களை நியமனங்களில் உள்வாங்க வேண்டும் என்று அவர்கள் கோஷம் எழுப்பினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago
6 hours ago