Thipaan / 2015 மே 14 , மு.ப. 10:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
ஏறாவூர் நகர சபையில் பணியாற்றும் சுகாதார தொழிலாளிகளுக்கு, அவர்களது உடற் சுகாதாரத்தைப் பேணிக் கொள்வதற்காக பாதணிகள், கையுறைகள், அங்கிகள் என்பன ஐ.நா. நிறுவனமான 'ருNழுPளு' இனால் வியாழக்கிழமை(14) கையளிக்கப்பட்டது.
23 சுகாதாரத் தொழிலாளிகள் இந்தப் பாதுகாப்பான உபகரணங்களையும் அங்கிகளையும் பெற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்வில், ஏறாவூர் நகர சபையின் தவிசாளர் எம்.ஐ.எம். தஸ்லீம், நகரசபை செயலாளர் எம்.எச்.எம். ஹமீம் உட்பட நகரசபையின் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் பிரசன்னமாகியிருந்தனர்.
ஐ.நா. வின் யுனொப்ஸ் நிறுவன நிகழ்ச்சித் திட்ட அதிகாரி சிதம்பரப்பிள்ளை சிவக்குமாரன் இவற்றை ஏறாவூர் நகர சபைக்குக் கையளித்தார்.


16 minute ago
19 minute ago
22 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
19 minute ago
22 minute ago