2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

ஆற்றை கடக்க முற்பட்டவர் காணாமல் போயுள்ளார்

Suganthini Ratnam   / 2015 மே 15 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  சந்தனமடு ஆற்றை கடப்பதற்கு முற்பட்ட   குடும்பஸ்தர் ஒருவர் காணாமல் போயுள்ளார்  என்று  உறவினர்கள் தம்மிடம்  முறைப்பாடு செய்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

வந்தாறுமூலை பேக் ஹவுஸ் வீதி பலாச்சோலையைச் சேர்ந்த கந்தையா பத்மநாதன் (வயது 55) என்பவரே  நேற்று வியாழக்கிழமை இரவு  ஆற்றில் காணாமல் போயுள்ளார்.

உறவினர்களும் ஊர்மக்களும்; பொலிஸாரின் உதவியுடன் இவரை தேடி வருகின்றனர்.

கடந்த 4 மாதகாலத்துக்குள்  சந்தனமடு ஆற்றில் மூழ்கி மூவர் உயிரிழந்துள்ளமை   குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X