Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2015 மே 15 , மு.ப. 08:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
திருகோணமலை, மூதூர் பிரதேசத்திலுள்ள படுகாடு பகுதியிலுள்ள ஒருபகுதி வயல் நிலத்தின் உரிமை தொடர்பாக மூவின விவசாயிகளுக்கும் இடையிலான சர்ச்சை தொடர்கின்ற நிலையில், இது தொடர்பில் ஆராயும் வகையில் சந்திப்பொன்று நேற்று வியாழக்கிழமை (14) நடைபெற்றது.
மூவின விவசாயிகளுக்கும் சேருவில மற்றும் மூதூர் பிரதேச செயலக அதிகாரிகள், காணி அதிகாரிகளுக்கும் இடையில் படுகாடு வயல் பகுதியில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
இந்தச் சந்திப்பின்போது தீர்வுகள் எதுவும் எட்டப்படாத நிலையில், சர்ச்சைக்குரிய வயல் நிலத்தில் நெற்செய்கையில் ஈடுபடுவதற்கு மேற்படி அதிகாரிகளினால் தடை விதிக்கப்பட்டுள்ளதாக இச்சந்திப்பில் ஈடுபட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
மூதூர் மற்றும் சேருவில பிரதேச செயலக பிரிவுகளின் எல்லையாக படுகாடு பகுதி அமைந்திருக்கின்ற போதிலும், அதன் நிர்வாகம் மூதூர் பிரதேச செயலகத்தாலேயே பரிபாலிக்கப்படுகின்றது.
யுத்தம் இடம்பெற்ற வேளையில் தமிழ் விவசாயிகள் அந்த பகுதிக்கு செல்லமுடியாத நிலைமை காணப்பட்டது. ஆயினும், பெரும்பான்மையின விவசாயிகள் தொடர்ந்து அந்தப் பிரதேசத்தில் நெற்செய்கையில்;; ஈடுபட்டு வந்துள்ளனர்.
யுத்தம் முடிந்து சமாதானம் நிலவுகின்ற போதிலும், தாங்கள் மீண்டும் தமது வயல்களுக்கு போய் நெற்செய்கையில் ஈடுபட தமது காணி உரிமை மறுக்கப்படுவதாக தமிழ் மற்றும் முஸ்லிம் விவசாயிகள் தெரிவித்தனர்.
காணி உரிமை தொடர்பான சட்ட ரீதியான ஆவணங்கள் அனைத்தும் தங்களிடம் இருப்பதாகவும் அவர்களால் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த காணிகளில் தொடர்ந்தும் வேளாண்மை செய்கைகளில் ஈடுபட்டுவருவதால் அரச முடிக்குரிய காணி என்பதில் அந்த உரிமை தங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று பெரும்பான்மையின விவசாயிகள் தரப்பு தெரிவிக்கின்றது.
இந்த காணிப் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத் தர வேண்டும் என கோரி சில நாட்களுக்கு முன்னர் தமிழ் விவசாயிகள் மூதூர் பிரதேச செயலகத்துக்கு முன்பாக ஆர்பாட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.
இந்தச் சந்திப்பின்போது தமிழ், சிங்கள விவசாய பிரதிநிதிகள் இவ்விரண்டு பேரும் முஸ்லிம் விவசாயி ஒருவருமாக ஐவரும் சேருவில பிரதேச செயலாளர் பி.ஆர்.ஜயரத்ன, மூதூர் பிரதேச செயலாளர் வி.யூசுப் மற்றும் காணி அதிகாரிகள் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் இந்தக் குழுவுக்கே வழங்கப்பட்டுள்ளதாக கூட்டத்தில் கலந்து கொண்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எஸ்.குமாரசாமி நாகேஸ்வரன் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
35 minute ago
35 minute ago
42 minute ago