2025 ஜூலை 07, திங்கட்கிழமை

ஆற்றை கடக்க முற்பட்ட நபர் முதலை தாக்குதலுக்குள்ளாகி பலி

Gavitha   / 2015 மே 16 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குப்பட்ட மயிலவெட்டுவான் ஆற்றைக் கடக்க முற்பட்ட குடும்பஸ்தர் முதலைக்கு தாக்குதலுக்குள்ளாகி பலியாகியுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

ஈரளக்குளம் வாத்தியின்வெட்டை எனும் இடத்தைச் சேர்ந்த கந்தையா பத்மநாதன் (54) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபரும் அவருடன் மற்றுமொருவரும் வந்தாறுமூலையில் உள்ள  உறவினர்களின் வீட்டுக்கு சென்றபோது, ஆற்றைக்கடப்பதற்கு தோணி இல்லாததன் காரணத்தினால் இருவரும் ஆற்றை நீந்திக் கடக்க முற்பட்டுள்ளனர்.

இதன்போது கந்தையா என்பவரை முதலை கடித்து இழுத்துச்சென்றுள்ளது. வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் இவருடன் ஆற்றைக்கடந்த மற்றையவர் அதிஷ்டவசமாக கரைசேர்ந்துள்ளார்.

ஈரளக்குளம் போன்ற பிரதேசங்களுக்கு செல்லும் மக்கள் மயிலவெட்டவான் ஆற்றினூடாக பாதுகாப்பற்ற மீன்பிடித் தோணியில் பயணிப்பதாகவும் மாலை வேளையில் போக்குவரத்து தடைப்பட்டு இருப்பதனால் சிலர் ஆற்றைக்கடந்து செல்ல முற்படுவதாகவும் பலர் மறுநாள் காலையிலேதான் செல்லவேண்டி உள்ளதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .