Thipaan / 2015 மே 16 , மு.ப. 07:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடி பொலிஸ் பிரிவில் 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான 40 கிராம் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் மூன்று இளைஞர்கள், நேற்று (15) கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி தலைமையிலான சப் இன்ஸ்பெக்டர் கே.செல்வாராசா, பொலிஸ் கான்ஸ்டபிள்களான கே.கருணாரட்ன (40976), எஸ்.மதுசங்க(71683), எஸ்.சந்திரகுமார்(66440), ஆகியோரை கொண்ட குழு நேற்றுக்காலை முதல் காத்தான்குடி பரீட் நகர் பிரதேசத்தில் பொலிஸ் மோப்ப நாய்களின் உதவியுடன் சுற்றிவளைப்பு நடத்தியது.
இதன்போது, ஹெரொயின் வர்த்தகர்களான இரு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டதுடன், கொழும்புக்;கு கடத்திச்செல்லும் மற்றொரு நபர் புதிய காத்தான்குடி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
காத்தான்குடியிலிருந்து கட்டார் நாட்டுக்கு, டெனீம் நீளக்காற்சட்டையின் இடுப்பு பட்டியினுள் ஐஸ்பழம் தயாரிக்கும் பொலித்தீன் கவரினுள் வைத்து தைத்து கடத்தப்படவிருந்த நிலையிலேயே இரு இளைஞர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்;.
இவ்களிடமிருந்து பாஸ்போட்கள், வங்கி கணக்கு புத்தகங்கள், டெனீம் ரவுசர்களின் பட்டிகள் இகையடக்க தொலைபேசி என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேக நபர்கள் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்.


19 minute ago
22 minute ago
25 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
22 minute ago
25 minute ago