2025 ஜூலை 07, திங்கட்கிழமை

களியாட்ட நிகழ்வின் ஆரம்ப நிகழ்வு

Thipaan   / 2015 மே 16 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

உக்டா நிறுவனத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரையில் முதன்முதலாக நடைபெறும் பிரமாண்டமான களியாட்ட நிகழ்வின் ஆரம்ப நிகழ்வு   உக்டா சமூகவள நிலையத்தில் வெள்ளிக்கிழமை (15)  இடம்பெற்றது.

இந்நிகழ்வினைமண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் திருமதி சத்தியாநந்தி நமசிவாயம்  வைபவ ரீதியாக திறந்து வைத்து ஆரம்பித்தார்.

உக்டா நிறுவன தலைவர் இ.குகநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் திருமதி சத்தியாநந்தி நமசிவாயம், மண்முனை தென்மேற்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் ந.தயாசீலன், வேள்ட்விஸன் நிறுவன பட்டிப்பளை பிரிவு திட்ட முகாமையாளர் ஜி.ஜே.அனுராஜ், திட்ட இணைப்பாளர்கள், பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

நேற்று ஆரம்பமான இக் களியாட்ட நிகழ்வானது  இன்றும் நாளையும் இடம்பெற இருக்கின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .