Thipaan / 2015 மே 16 , மு.ப. 09:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன், கே.எல்.ரி.யுதாஜித்
மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தூர்ந்து போன குளங்கள் தற்போது மீண்டும் புனரமைப்புச் செய்யப்பட்டு வருவதாக வாகரைப் பிரதேச செயலாளர் எஸ்.ஆர். ராகுலநாயகி தெரிவித்தார்.
தூர்ந்து போன பாரம்பரிய குளங்களைப் புனரமைக்கும் திட்டத்துக்கமைவாக பனிச்சங்கேணி கிராம சேவகர்பிரிவில் உள்ள கருவேப்பஞ்சேனைக் குளம் புனருத்தாரண ஆரம்ப நிகழ்வு வெள்ளிக்கிழமை(15) இடம்பெற்றது.
உலக தரிசன நிறுவனத்தின் பிள்ளைகளின் வாழ்க்கையினை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் அப்பிள்ளைகள் சார்ந்த குடும்பத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக சுமார் 1 கோடி 10 இலட்ச ரூபாய் செலவில் இந்தக் குளம் புனரமைக்கப்படவுள்ளது.
இந்தக் குளம் புனரமைக்கப்படுவதின் மூலம் சுமார் 400 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதி கிடைப்பதோடு சுமார் 300 குடும்பங்கள் நேரடியாக நன்மை பெறவிருக்கின்றனர்.
மேலும் இந்தக் குளத்தில் தேக்கி வைக்கப்படும் நீரைக் கொண்டு வருடத்தில் மும்முறை நெற்செய்கை மேற்கொள்ள முடியும் எனவும் விவசாய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
நிகழ்வைத் தொடக்கி வைத்து உரையாற்றிய பிரதேச செயலாளர் எஸ்.ஆர். ராகுலநாயகி,
இந்தக் குளம் குழந்தைகளின் நன்மைக்கான உலக தரிசன நிறுவனத்தின் செயற்றிட்டத்தின் கீழ் புனரமைப்புச் செய்யப்படுவதனால் இந்தக் குளத்தின் மூலம் தமது வாழ்வாதாரத்தைத் தேடிக் கொள்ளும் பெற்றோர் தமது குழந்தைகளின் கல்வி நலனுக்காக அக்கறை எடுக்க வேண்டும்.
இந்தக் குளத்துக்குச் செய்யப்பட்டிருக்கின்ற முதலீடு இப்பிரதேசத்தைச் சூழ்ந்திருக்கின்ற குழந்தைகளுக்காகச் செய்யப்பட்டிருக்கின்ற முதலீடாகக் கருத வேண்டும்.
அதன் மூலம் வறிய விவசாயிகளினது வருமானம் அதிகரிப்பதைக் கொண்டு அவர் தம் குடும்பங்களிலுள்ள பிள்ளைகளின் கல்வி முன்னேற்றமடைய வழயேற்படும்.
அதன் மூலம் இப்பிரதேசத்தில் வாழும் ஒட்டு மொத்த சமூகமுமே கல்வி பொருளாதார முன்னேற்றத்தை அடைந்து கொள்ளவது சாத்தியப்படும்' என்றார்.
அப்பிரதேச கமநல விவசாய அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்;நிகழ்வில் பிரதேச செயலாளர் எஸ். ஆர். ராகுலநாயகி, கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் எஸ். சிவலிங்கம், வேர்ள்ட் விசன் (உலக தரிசன) நிறுவன முகாமையாளர் வொனி வின்சென்ற்;, அந்நிறுவனத்தின் திட்டத்திற்கு பொறுப்பான அதிகாரி ஜீ. சுரேஸ், மற்றும் கமநல விவசாய அமைப்பின் பிரதிநிதிகள் கிராம பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
1962ஆம் ஆண்டு கிராம விவசாயிகள் தாங்களாகவே திட்டமிட்டு தங்களது மனித உழைப்பால் இந்தக் குளத்தைக் கட்டியதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.


19 minute ago
22 minute ago
25 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
22 minute ago
25 minute ago