Thipaan / 2015 மே 16 , மு.ப. 09:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்
மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை மற்றும் வவுணதீவுப் பிரதேசங்களில் வியாழக்கிழமை இரவு புகுந்த யானைகளின் அட்டகாசம் காரணமாக இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் பயிர்ச் செய்கைகளும் அழிக்கப்பட்டுள்ளன.
மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவின்கச்சைக் கொடி சுவாமி மலை பிரதேசத்தில் வியாழக்கிழமை(14) இரவு 10 மணியளவில் புகுந்த யானை ஒன்று இரண்டு வீடுகளை சேதப்படுத்தியுள்ளது.வீரக்குட்டி ஆறுமுகம், கணபதிப்பிள்ளை இராஜேந்திரம் ஆகியோரது வீடுகளே இவ்வாறுசேதமடைந்துள்ளன.
இதேவேளை, மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கன்னன்குடாபிரதேசத்தில் இரவு 10 மணியளவில் புகுந்த இரண்டு யானைகள் தம்பிப்பிள்ளைதம்பாப்பிள்ளை என்பவரது பயிர்ச்செய்கை நிலங்களைச் சேதப்படுத்தியுள்ளன.
குறித்த பிரதேசங்களை நேரில் சென்று பார்வையிட்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம், பிரதேச செயலாளர் மற்றும் வன விலங்கு பாதுகாப்புத்திணைக்களத்தினருடனும் கலந்தரையாடி பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்ட ஈடு வழங்கநடவடிக்கை எடுக்கும் படி கேட்டுக் கொண்டுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலாளர்பிரிவிலும், மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுகளில் கடந்த 15 நாட்களில் மாத்திரம் 11 வீடுகள் யானைகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளதுடன், பயிர்நிலங்களும் அழிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.கடந்த 2013ஃ2014ஆம் ஆண்டுகளில் காட்டு யானைகளால் அண்ணளவாக 120 வீடுகளுக்கு மேல் சேதப்படுத்தப்படடுள்ளன.
சேதமாக்கப்பட்ட வீடுகளுக்கு இன்றுவரை மாற்று வீடுகள் கட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.யானைகள் கிராமங்களுக்குள் புகுந்து மக்களை விரட்டி விட்டு, வீடுகளை உடைத்து, வீட்டுக்குள் இருந்த தானியவகைகளையும் பயிர்களையும் நாசப்படுத்தி வருவதனால் இப்பிரதேசங்களிலுள்ள மக்கள் நிம்மதியின்றி வாழ்ந்து வருகின்றனர்.
தமக்கு நிரந்தரமான தீர்வு கிடைக்க வேண்டும் என்று மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.


14 minute ago
17 minute ago
20 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
17 minute ago
20 minute ago