Sudharshini / 2015 மே 16 , மு.ப. 11:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
கே.எல்.ரி.யுதாஜித்
இயந்திர உலகில் உற்பத்தியாளர்களின் புத்தாக்க சிந்தனை கொண்ட மாபெரும் தொழில்துறை கண்காட்சியும் சமூக நாள் நிகழ்வுகளும் வியாழக்கிழமை (14) முற்பகல் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஆரம்பமானது.
இந்நிகழ்வுகள் 14ஆம் திகதி ஆரம்பமாகி இன்று (16) வரை நடைபெற்றன.
உயர்க்கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைச்சின் தொழில்நுட்ப ஆராய்ச்சிப்பிரிவின் கீழ் இயங்கும் மட்டக்களப்பு மாவட்ட விதாதா வள நிலையங்கள், கிழக்குப் பல்கலைக்கழக முகாமைத்துவப்பிடத்தின் 21ஆம் நூற்றாண்டுக்கான உயர்க்கல்வித்திட்டத்துடன் இணைந்து உலக தரிசன நிறுவனத்தின் அனுசரணையுடன் இக்கண்காட்சி நடைபெற்றது.
மட்டக்களப்பு வந்தாறுமூலையிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பிரதான வளாக மைதானத்தில் நடைபெற்ற இக்கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில், பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கலந்து கொண்டார்.
ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் யு.உதயசிறிதர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், விசேட அதிதிகளாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா, உதவி மாவட்டச் செயலாளர் எஸ்.ரங்கநாதன், கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், உலக தரிசன நிறுவனத்தின் வலய முகாமையாளர் அலெக்ஸ் பெஞ்சமின் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சுயதொழில் முயற்சியாளர்கள், உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களது உற்பத்தி பொருள்களுக்கு சந்தை வாய்ப்பை ஏற்படுத்தி பொருளாதாரத்தில் தலைநிமிரச் செய்யும் நோக்கில் இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் தொழில்துறை கண்காட்சியும் சமூக நாள் நிகழ்வுகளில் கலை, கலாசார ஆற்றுகைகள், சிறுவர்களுக்கான விளையாட்டு நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இக்கண்காட்சியில் 260 தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருள்களும், 120 பாடசாலை மாணவர்களின் புத்தாக்க கண்டுபிடிப்புகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
அத்துடன், கொழும்பு பங்குபரிவர்த்தனை, கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களின் காட்சிப்படுத்தல்களும் இக்கண்காட்சியில் இடம் பிடித்துள்ளன.
21 minute ago
24 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
24 minute ago
27 minute ago