2025 ஜூலை 07, திங்கட்கிழமை

சுயதொழில் மேம்பாட்டுக்காக 13 குடும்பங்களுக்கு நிதியுதவி

Suganthini Ratnam   / 2015 மே 17 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவில் வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள குடும்பங்களில்  தெரிவுசெய்யப்பட்ட 13 குடும்பங்கள்  சுயதொழில்  மேற்கொற்கொள்வதற்காக குடும்பமொன்றுக்கு 20,000 ரூபாய் படி நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை  நிதியுதவி வழங்கப்பட்டதாக அப்பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் தெரிவித்தார்.

கால்நடை வளர்ப்பு, விவசாயம், சிறு வியாபாரம், குடிசைக் கைத்தொழில் உள்ளிட்ட சுயதொழில்களை மேற்கொண்டு குடும்ப பொருளாதாரத்தை தேடிக்கொள்ளும் முகமாக கிழக்கு மாகண சமூக சேவைகள் திணைக்களத்தினால் இந்த நிதியுதவி வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

வவுணதீவு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற  இந்நிகழ்வில்  பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர், உதவி பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு, மாவட்ட சமூகசேவை உத்தியோகஸ்தர் எஸ்.அருள்மொழி, பிரதேச சமூக சேவை அபிவிருத்தி உத்தியோகஸ்தர் நவலெட்சுமி தயாபரன் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .