Suganthini Ratnam / 2015 மே 17 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ஜெயஸ்ரீராம்
மட்டக்களப்பு, வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குகணேசபுரம் கிராமத்தினுள் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை புகுந்த காட்டு யானையொன்று வீடொன்றை உடைத்து சேதப்படுத்தியதுடன், அங்கிருந்த மரங்களையும் சேதப்படுத்தியுள்ளதாக பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர் சின்னத்தம்பி குணராசா தெரிவித்தார்.
இந்த யானையின் அட்டகாசம் பகல் வேளைகளிலும் தொடர்வதாகவும் கடந்த பல மாதங்களாக நீடித்துவருகின்றது. யானையின் அட்டகாசத்தினால் குடியிருப்பாளர்கள் இக்கிராமத்தில் நிம்மதியாக வாழமுடியாதவாறு சிரமப்படுதவாகவும் அக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த யானையை துரத்துவதற்கு வனஜீவராசிகள் அதிகாரிகள் முன்வரவேண்டும் இந்த மக்கள் கூறினர்.

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .