Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2015 மே 17 , மு.ப. 06:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
தற்போது இலங்கையில் நல்லாட்சி ஏற்பட்டுள்ளதென்று கூறப்படுகின்றபோதிலும், நல்ல விடயங்கள் நடைபெறாத நிலையிலுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தெரிவித்தார்.
மட்டக்களப்பு, பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பண்டாரியாவெளி கிராமத்தில் விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பில் நேற்று சனிக்கிழமை ஆராயப்பட்டது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர்,
'கடந்த காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற பல்வேறு அனர்த்தங்கள் காரணமாக படுவான்கரை பிரதேச விவசாயிகள் பெரும் பாதிப்புக்களை எதிர்கொண்டனர். குறிப்பாக வெல்லாவெளி, பட்டிப்பளை, வவுணதீவு ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் வெள்ளம் மற்றும் வரட்சி காரணமாக பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டனர்.
கடந்த அரசாங்க காலத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளில் ஒரு சிலருக்கு மட்டுமே நிவாரணங்கள் வழங்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணங்கள் வழங்க நூறு மில்லியன் ரூபாய் தேவைப்பட்டது. இது தொடர்பில் கடந்த அரசாங்க காலத்தில் பல தடவைகள் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அவை கவனத்தில் கொள்ளப்படவில்லை.
புதிய அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னரும் இது தொடர்பில் நாங்கள் கோரிக்கை விடுத்தோம். தற்போதும் அவை கவனத்தில் கொள்ளப்படவில்லை.
நாங்கள் இன்று நல்லாட்சி என்று கூறுகின்றோம். ஆனால் எந்த நல்லவையும் நடப்பதாக தெரியவில்லை. இது தொடர்பில் நாங்கள் பின்னிற்கபப் போவதில்லை. இந்தப் பணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இல்லாமல் போய்விட்டது. ஆனால் நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்வோம்.
இந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்காக நாங்கள் இணைந்த ஒரு நல்லாட்சியை உருவாக்கவேண்டும். நாங்கள் முற்றுமுழுதாக அபிவிருத்தியை வெறுக்கவில்லை. எங்களுக்கு அபிவிருத்தி மிகவும் முக்கியமானது. ஆனால் அபிவிருத்தியை காட்டி ஏனையவற்றையும் ஒதுக்கமுடியாது' என்றார்.
பண்டாரியாவெளி பொது அமைப்புகளின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துiராஜசிங்கம் பிரதம அதிதியாகவும் சிறப்பு அதிதிகளாக கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன். செல்வராசா, பா.அரியநேத்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
6 hours ago