2025 ஜூலை 07, திங்கட்கிழமை

வீதி விபத்துக்களை தடுக்கும் வேலைத்திட்டம்

Sudharshini   / 2015 மே 17 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்

வீதி விபத்துக்களை குறைக்கும் நோக்கில் மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் உபாலி ஜெயசிங்கவின் வழிகாட்டலில் வாழைச்சேனை பொலிஸார், தமது பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

இதன் அடிப்படையில் இரவில் பயனிக்கும் துவிச்சக்கர வண்டிகளை அடையாளப்படுத்தும் வகையில் 'உங்களைப் பாதுகாப்பதே எங்களது கரிசனை' எனும் தொனிப்பொருளில் வாழைச்சேனை பொலிஸார் துவிச்சக்கரவண்டிகளுக்கு ஸ்டீக்கர்களை ஒட்டும் வேலைத்திட்டத்தினை சனிக்கிழமை (17) வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடி பிரதேசத்தில் முன்னெடுத்தனர்.

செலிங்கோ காப்புறுதி நிறுவனத்தின் வாழைச்சேனை கிளை மற்றும் கோறளைப்பற்று வேல் விஷன் நிறுவனம் என்பவற்றின் அனுசரனையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திப்புட்டுமுன, வாழைச்சேனை பொலிஸ் நிலைய மோட்டார் போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி சமரதிலக, செலிங்கோ காப்புறுதி நிறுவனத்தின் வாழைச்சேனை கிளை முகாமையாளர் எல்.ஜே.மைகல், செலிங்கோ காப்புறுதி நிறுவனத்தின் செங்கலடி கிளை முகாமையாளர் எஸ்.மதிவானன், கோறளைப்பற்று வேல்விஷன் நிறுவனத்தின் கணக்காளர் ரெஜினோல் மார்க் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .