Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
George / 2015 மே 17 , மு.ப. 09:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.எல்.ரி.யுதாஜித்
கடந்த சில தினங்களுக்கு முன்னர் நயவஞ்சகமும் பித்தும் பிடித்த காமுகர்களால் கோரமான முறையிலே உயிர் பறிக்கப்பட்ட புங்குடுதீவு 09ஆம் வட்டாரத்தை சேர்ந்த உடன்பிறவா சகோதரி செல்வி.சிவலோகநாதன் வித்தியாவின் கொலைக்கு காரணமானவர்களை நீதியின் முன்னிறுத்தி உரிய தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டியது அவசியமாகும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணி விடுத்துள்ள கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இளைஞர் அணியினர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாகவது.
தமிழர் நாம் பாரம்பரியமாக செறிந்து வாழும் வட கிழக்குப் பகுதியில் தொடர்ச்சியாக பல துன்புறுத்தல்களையும், சமுதாய சீரழிவுகளையும் எதிர்நோக்க வேண்டியவர்களாக இருப்பதும், இதன் காரணமாக இளைய சமுதாயம் உக்கிப்போவதும் நம் தமிழினத்தின் எதிர்காலம் பற்றிய கேள்வியை கேட்டு நிற்பதோடு சாபக்கேடாகவும் இருக்கின்றது.
கடந்த காலங்களில் எமது இனத்துக்கு ஏற்பட்ட தொடர் இழப்புக்களின் தாக்கத்தில் இருந்து சமூகம் விடுபட முன்னரே இவ்வாறான மீளமுடியாத இழப்புக்களை எமது இன இளைய சமூகத்திற்கு குறிப்பாக பெண்களுக்கு ஏற்படுத்துவது இனத்தின் அடையாளங்களை குழிதோண்டி புதைக்கின்ற செயற்பாடாக கருத வேண்டி இருக்கின்றது.
இறைவன் பெண்ணை விட ஆணை வலிமையானவனாக படைத்திருக்கின்றான் என்றால் அவனால் பெண்ணினம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதினாலாகும். அதன் மூலம் தான் இனத்தின் வளர்ச்சியும், எதிர்காலமும் இருக்கின்றது. ஆனால் இன்று, வேலியே பயிரை மேய்கின்ற திட்டமிடப்பட்ட செயற்பாடானது எதிர்காலத்தில் எமது இனத்தினை எங்கு கொண்டு செல்லப்போகின்றது என்ற கேள்வியை நாம் அனைவரும் ஒருமுறை கேட்க வேண்டியதன் கட்டாயத்தில் இருக்கின்றோம்.
எனவே சமூகத்தில் சகல மட்டத்திலும் உள்ள அனைவரும் வெறுமனே இவ்வாறான கொலை நடந்ததும் பொங்கி எழுவதும், பின்னர் அமைதியாகவும் இருக்காமல் இளைய சமுதாயத்தின் பாதுகாப்புக்கும் வளர்ச்சிக்குமான பொருத்தமான சமூகசார் கட்டமைப்புக்களை உருவாக்க வேண்டுமெனவும் உருக்கமாக கோருகின்றோம்.
இனிமேலும் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறா வண்ணம் சிவில் அமைப்புக்கள், பாதுகாப்பு தரப்பினர் மற்றும் சம்பந்தப்பட்ட ஏனைய தரப்பினர் கண்ணும் கருத்துமாக செயற்பட வேண்டும் எனவும் கோருகின்றோம்.
இறைபதமடைந்த சகோதரியின் ஆத்மா சாந்தியடையட்டும் என எல்லாம் வல்ல இறைவன் பாதம் சேரட்டும் எனவும் அந்த கண்டன அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
7 hours ago
7 hours ago