2025 மே 17, சனிக்கிழமை

புங்குடுதீவு மாணவியின் கொலையை கண்டித்து மட்டக்களப்பிலும் ஆர்ப்பாட்டங்கள்

Suganthini Ratnam   / 2015 மே 20 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

–எம்.எஸ்.எம்.நூர்தீன், வடிவேல் சக்திவேல்,எஸ்.பாக்கியநாதன்,வா.கிருஸ்ணா,கே.எல்.ரி.யுதாஜித் 

யாழ். புங்குடுதீவில் பாடசாலை மாணவியொருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமையை கண்டித்து மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலை மாணவர்கள் இன்று புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

மட். களுதாவளை மகா வித்தியாலய பாடசாலை, மட்டக்களப்பு ஆரையம்பதி மகா வித்தியாலயம், மட்டக்களப்பு வின்சன் மகளிர் உயர்தர தேசிய பாடசாலை உள்ளிட்ட பாடசாலைகளின் மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

மட். களுதாவளை மகா வித்தியாலய பாடசாலை மாணவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது,  'நவீன காலத்திலும் பெண்களுக்கு அடக்குமுறையா?', 'அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுப்போம்!;, 'பெண்களுக்கு எதிரான வன்முறையில்லா புது உலகம் வேண்டும்!', 'வித்தியாவின் நிலை மீண்டும் ஒரு மாணவிக்கு வேண்டாம்', உள்ளிட்ட சுலோகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை தாங்கியிருந்தனர்.

இதேவேளை, மட்டக்களப்பு ஆரையம்பதி மகா வித்தியாலய  மாணவர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தின்போது, 'கயவர்களை கைதுசெய்', 'வித்தியாவுக்கு நீதி கிடைக்கும்வரை போராடுவோம்', 'நல்லாட்சியில் பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லையா?', போன்ற சுலோகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை தாங்கியிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .