2025 மே 17, சனிக்கிழமை

காணி பயன்பாட்டு வரைபடம் தயாரிப்பதற்கான கூட்டம்

Suganthini Ratnam   / 2015 மே 21 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்  

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சீபாரிசுக்கு அமைய  உருவாக்கப்பட்ட காணிப் பயன்பாட்டு திணைக்களத்தினால் காணிப் பயன்பாட்டு வரைபடம் தயாரிப்பதற்கான பங்காளர்களை தெளிவுபடுத்தும் கூட்டம் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் நேற்றுமுன்தினம்  செவ்வாய்க்கிழமை (19) நடைபெற்றது.

பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் காணிப் பயன்பாட்டுத் திணைக்கள தலைமைக் காரியாலயத்தின் உதவிப் பணிப்பாளர் எம்.கிருபாமூர்த்தி,  காணிப் பயன்பாட்டுத் திணைக்களத்தின் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட உதவி ஆணையாளர் ஆகியோர் கலந்துகொண்டு இதற்கான விளக்கங்களை முன்வைத்தனர்.

மேலும் இக்கூட்டத்தில் வன இலாக திணைக்களம், நீர்ப்பாசன திணைக்களம், பிரதேச சபை, காணி, உத்தியோகத்தர்கள், கரையோர பாதுகாப்பு திணைக்களம், தென்னை அபிவிருத்திச் சபை போன்ற திணைக்களங்களை சார்ந்த உத்தியோகத்தர்கள்  இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

தரிசு நிலங்களை பயனுள்ள வகையில் எவ்வாறு பயன்படுத்தலாம், காணிக்கான பாதுகாப்பை  ஏற்படுத்தவது சம்மந்தமாக விரிவான விளக்கங்கள் இதன்போது முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .