Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2015 மே 21 , மு.ப. 11:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடிவேல் சக்திவேல்
சமூகமட்ட விபத்துக்களை குறைப்பதற்கான விழிப்பூட்டல் கருத்தரங்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் மண்முனை தென்னெருவில்பற்று பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கு நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது.
பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினத்தின்; தலைமையிலும்; பிரதேச செயலக முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகஸ்தர் சி.அருந்ததியின் ஒழுக்கமைப்பிலும் நடத்தப்பட்ட இக்கருத்தரங்கில் உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.சத்தியகௌரி, சர்வோதய அமைப்பின் திட்ட இணைப்பாளர் கே.குமரேசன், களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய போக்குவரத்துப்பிரிவு பொறுப்பதிகாரி டி.எம்.வியஜசுந்தர உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதில் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஜி.சுகுணன் வளவாளராகக் கலந்துகொண்டு கருத்துக்களை வழங்கிளனார்.
இக்கருத்தரங்கில் 55 பாடசாலைகளிலிருந்து சுமார் 65 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்குபற்றினர்;. இதன்போது, சமூகமட்டத்தில் ஏற்படுகின்ற சாதாரண விபத்துக்களிலிருந்து குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பது, ஏற்படக்கூடிய சமூகமட்ட விபத்துக்கள் என்ன?, இதை தவிர்த்துக்கொள்வதற்கான வழிவகைகள், விபத்தில் சிக்கிய குழந்தைகளுக்கான முதலுதவிகள் என்ன?, போன்றவை தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
48 minute ago
3 hours ago
5 hours ago