2025 ஜூலை 05, சனிக்கிழமை

விசேட தேவையுடையோரின் நலன் கருதி 'வாழ்வகம்' அலுவலகம் திறந்து வைப்பு

Princiya Dixci   / 2015 மே 22 , மு.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்தில் விசேட தேவையுடையோரின் நலன்களைப் பேணும் வகையில் 'வாழ்வகம்' அலுவலகம், புதன்கிழமை (21) திறந்து வைக்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் எஸ். சுதாகர் தெரிவித்தார்.

வாழ்வகம் அமைப்பின் தலைவர் எஸ்.புவிராஜசிங்கம் தலைமையில் இந்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.

அலுவலகத்தைத் திறந்து வைத்து பிரதேச  செயலாளர் எஸ். சுதாகர் உரையாற்றும் போது, 'மட்டக்களப்பு நகரப்பகுதிகளிலுள்ள விசேட தேவையுடையோரின் நலன் பேணும் அலுவலகங்களுக்குச் செல்ல முடியாதிருக்கும் வவுணதீவுப் பிரதேச விசேட தேவையுடையோர், இந்த அலுவலகம் திறக்கப்பட்டதன் மூலம் தமது காலடியிலேயே மிகுந்த நன்மையடைவர்' எனக் கூறினார்.

அத்துடன், 'வவுணதீவுப் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சுமார் 531 விசேட தேவையுடையோருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் மிகுந்த ஆறுதலளிக்கும். விசேட தேவையுடைய சிறுவர்களுக்கு கல்வியூட்டல் போன்ற நடவடிக்கைக்காகவும் இந்த அலுவலகம் பயன்படுத்தப்டவுள்ளது' என்றார்.

இந்நிகழ்வில் மண்முனை மேற்கு பிரதேச செலாளர் எஸ்.சுதாகர், மென்கபெப் பணிப்பாளர் சபை உறுப்பினர்களான எம். நெசப்ஸ், ரஞ்சி ஸ்பவ்லஸ், மாவட்ட சமூகசேவை உத்தியோகஸ்தர் எஸ்.அருள்மொழி, கொய்கா நிறுவன பணிப்பாளர் எஸ். அன்ரன், மாவட்ட சமூகசேவை அதிகாரி எஸ். அருள்மொழி, கமெட் நிறுவன உத்தியோகஸ்தர் ஜனோசினி கிருபானந்தராசா மற்றும் பிரதேச செயலக அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .