2025 மே 17, சனிக்கிழமை

புங்குடுதீவு மாணவிக்காக மூன்றாவது நாளாகவும் ஆர்ப்பாட்டங்கள்

Suganthini Ratnam   / 2015 மே 22 , மு.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன், ஆர்.ஜெயஸ்ரீராம், எஸ்.பாக்கியநாதன், கே.எல்.ரி.யுதாஜித்

யாழ்ப்பாணம், புங்குடுதீவு மாணவியின் கொலையை கண்டித்து மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்றாவது நாளாகவும் இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

இந்த மாணவியின் கொலையை கண்டித்தும் கொலையாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்குமாறு கோரியும் மட்டக்களப்பு செங்கலடி மத்திய கல்லூரி மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேவேளை, இந்த மாணவியின் கொலையை கண்டித்து தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணியின் ஏற்பாட்டில்  கல்லடியில் கண்டன ஊர்வலம் நடைபெற்றது.

கல்லடியிலுள்ள சிவானந்தா தேசிய பாடசாலைக்கு முன்பாக ஆரம்பமான இந்த கண்டன ஊர்வலம் கல்லடி மணிக்கூட்டு கோபுரம்வரை சென்றது.

இந்த  மாணவியின்  கொலையை கண்டிதும்  இக்கொலையுடன் தொடர்புடையவர்களுக்கு உரிய தண்டனை வழங்குமாறு கோரியும் கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் கண்டனப்பேரணி இடம்பெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .