2025 மே 17, சனிக்கிழமை

மானிய உரத்தை மாற்றி பொதி செய்த ஐவர் கைது

Suganthini Ratnam   / 2015 மே 22 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

ஏறாவூர், மீராகேணி கிராமத்திலுள்ள அரிசி ஆலையொன்று இன்று வெள்ளிக்கிழமை திடீரென்று சுற்றிவளைக்கப்பட்ட நிலையில்,  மானிய உரத்தை மாற்றி  பொதி செய்ததாகக் கூறப்படும் 5 பேர் கைதுசெய்யப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

அரசாங்கத்தினால் மானியமாக குறைந்த கட்டணத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் உரத்தை விவசாயிகளிடமிருந்து மிகக் குறைந்த விலைக்கு பெற்று அதன் பொதியை மாற்றி அதிக விலைக்கு விற்பனை செய்யும் தொழில் நீண்டகாலமாக இடம்பெற்று வந்திருக்கின்றது.

இது தொடர்பாக மட்டக்களப்பு குற்றத்தடுப்பு புலனாய்வுப் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலை அடுத்து இந்த  அரிசி ஆலை  சுற்றிவளைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வேளையில் மானிய உரப்பொதிகள் மாற்றப்பட்டு வேறு பொதிகளில் உரம் வேறு பொதிகளில் நிரப்பப்பட்டிருந்ததையும் பொலிஸார் கண்டுபிடித்தனர்.

மோசடியாகப் பொதி செய்யப்பட்ட ஒரு தொகை உரமும் அந்த உரத்தை ஏற்றியிறக்கப் பயன்படுத்தப்பட்;ட  லொறியும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது விடயமாக குறித்த அரிசி ஆலையின் உரிமையாளர் உட்பட தொழிலாளிகள் மூவரும் லொறிச் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .