Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Thipaan / 2015 மே 23 , மு.ப. 04:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.எல்.ரி.யுதாஜித்
மாற்றுத்திறன் கொண்ட சிறுவர்களின் வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், 20 சிறுவர்களுக்கான மாற்று ஒழுங்குகள் செய்யப்பட்ட 20 சக்கர கதிரைகள் சிறுவர் நிதியத்தின் மட்டக்களப்பு பிராந்தியக்கிளையில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன.
நியூசிலாந்து சிறுவர் நிதியத்தின் நிதியிலேயே இக்கதிரைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வு, பிராந்திய முகாமையாளர் பேனாட் பிரகாஸின் தலைமையில் சிறுவர் நிதியத்தின் ஆசியப் பிராந்தியத்துக்கான திட்ட முகாமையாளர் நியூசிலாந்தைச் சேர்ந்த கோல் கேற் இன் பங்குபற்றலுடன் வெள்ளிக்கிழமை (22) நடைபெற்றது.
சிறுவர் நிதியத்தின் நியூசிலாந்து கிளையின் 8 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் நிதியில், சிறுவர் நிதியத்தின் இலங்கைக்கிளையும் வவுணதீவு அபிவிருத்தி நிறுவகமும் இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்தியுள்ளன.
அத்துடன், ஹன்டிக்கப் இன்ரர்நசனல், கமிட் ஆகிய அமைப்புக்களும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இயன் மருத்துவப்பிரிவு ஆகியவற்றின் தொழில்நுட்ப உதவியுடன் இந்த மாற்றுத்திறன் கொண்ட சிறுவர்களுக்கான வசதிகள் மேம்படுத்தப்பட்ட சக்கர கதிரைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இதன் முக்கியத்துவம் என்னவெனில், மாற்றுத்திறனாளிகளின் இயங்கு தன்மைகளை அதிகரிப்பதும் அவர்களுடைய தன்மையில் மாற்றங்களை ஏற்படுத்தாத, பாதிப்புக்களை ஏற்படுத்தாத வகையிலும் மாற்று ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக ஹன்டிக்கப் இன்ரர்நசனலின் திட்ட முகாமையாளர் ஜீ.கிறிஸ்ரி தெரிவித்தார்.
சிறுவர் நிதியத்தின் ஆசியப் பிராந்தியத்துக்கான திட்ட முகாமையாளர் நியூசிலாந்தைச் சேர்ந்த கோல் கேற், சிறுவர் நிதியத்தின் மட்டக்களப்பு பிராந்தியக்கிளையில் பிராந்திய முகாமையாளர் பேனாட் பிரகாஸ், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இயன் மருத்துவர் பி.ஏ.எம்.சி.வறக்கத்துல்லா, ஹன்டிக்கப் இன்ரர்நசனலின் திட்ட முகாமையாளர் ஜீ.கிறிஸ்ரி, கமிட் நிறுவனத்தின் எஸ்.சக்தி, வவுணதீவு அபிவிருத்தி நிறுவகத்தின் திட்ட முகாமையாளர் எஸ்.ஆர்.டிலிமா, அனுசரணைத்திட்ட முகாமையாளர் கே.கஜேந்திரன் உள்ளிட்டோர் இந்தச் சக்கர கதிரைகளை வழங்கி வைத்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
42 minute ago
3 hours ago
5 hours ago