Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Gavitha / 2015 மே 24 , மு.ப. 06:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
ஊடகவியலாளர்கள் சட்ட பாதுகாப்பு தொடர்பாக அறிந்திருக்க வேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட சட்டத்தரணி தட்சணா மூர்த்தி சிவநாதன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு கல்லடியிலுள்ள வொயிஸ் ஒப் மீடியா ஊடக கற்கை நிறுவகத்தில் சனிக்கிழமை (23) நடைபெற்ற ஊடகவியலாளர்களுக்கான சட்டப்பாதுகாப்பு தொடர்பான செயலமர்வில் வளவாளராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
கிழக்கு மாகாண ஊடகவியலாளர் சம்மேளனத்தினால் சுதந்திர ஊடக செயற்பாடுக்கான இயக்கம், இலங்கை இணைய ஊடக சங்கம் ரைட்ஸ் நவ் அமைப்பு ஆகியவற்றின் அனுசரணையில் இந்த செயலமர்வு நடைபெற்றது.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் யாரையும் கைது செய்ய முடியும். தடுத்து வைத்து விசாரணை செய்யவும் முடியும். இந்த சட்டத்தின் கீழ் ஊடகவியலாளர்களையும் கைது செய்ய முடியும்.
ஒருவர் பிழையாக, காரணமின்றி கைது செய்யப்படும் போது, அடிப்படை உரிமை வழக்கொன்றை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம் என்று அவர் குறிப்பிட்டார்.
ஒரு மனிதனின் அடிப்படை உரிமை மதிக்கப்படல் வேண்டும். இந்த அடிப்படை மனித உரிமையின் கீழ் யாரையும் சித்திரவதை செய்ய முடியாது. சுதந்திரம், உரிமைகள், சிறப்புரிமை போன்ற ஒரு மனிதனின் அடிப்படை உரிமைகள் மீறப்படின் நிவாரணங்களை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.
தகவலறியும் உரிமையும் தகவலை வெளியிடும் சுதந்திரமும் உண்டு. ஒருவருக்கு எதிராக அவரை மானபங்கப்படுத்தி பத்திரிகைகள் செய்தி வெளியிடும் போது, அவர் மாவட்ட நீதிமன்றத்தை நாடி அவருக்கான நியாயத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவர் தேவ அதிரன் தலைமையில் நடைபெற்ற இந்த செயலமர்வில், சுதந்திர ஊடக செயற்பாட்டுக்கான இயக்கத்தின் ஏற்பாட்டாளர் பெற்றி கமகே உட்பட மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
45 minute ago
3 hours ago
5 hours ago