Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Gavitha / 2015 மே 24 , மு.ப. 06:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
சிதைவடைந்த மனித உள்ளங்களை சிறந்த கலாசாரப் பண்பாடுகளைக் கொண்டுதான் செப்பனிட முடியும் என கலாச்சார இராஜாங்க அமைச்சின் மேலதிகச் செயலாளர் பி.ஜி.டி. பிரதீபா சேரசிங்ஹ தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் நகர பிரதேச செயலகப் பிரிவில், ஏறாவூர் வாவிக் கரையோரம் நிர்மாணிக்கபட்ட கலாசார மத்திய நிலையத் திறப்பு விழா சனிக்கிழமை (23) இடம்பெற்றது.
கலாசார நிலையத்தை திறந்து வைத்து, அந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இரத்தத்தில் மாறுபாடு இல்லாததுதான் எமது நாட்டு மக்கள் அனைவரினதும் கலாசாரம். அதனால் இரத்தம் கொடுத்து இன்னொருவரின் உயிரைக் காப்பதற்கு நம் நாட்டு மக்கள் ஒரு போதும் இன மத பேதம் பார்ப்பதில்லை. நம் நாட்டு மக்களின் பிரதான உணவு நெல்லரிசிச் சோறாகும். நாம் கடையில் அரிசி வாங்கி அதனை சமைத்து உண்ணும்போது, அதனை எந்த இனத்தவர் உற்பத்தி செய்தார்கள் என்று பார்ப்பதில்லை. ஏனென்றால் இன, மத, பேதம் என்பது இரத்தத்திலும் இல்லை, இயற்கைக் கொடைகளிலும் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.
நாம் எதை விதைக்கின்றோமோ அது தான் அறுவடையாக கிடைக்கும். நல்ல பயிர்களின் சிறந்த விதைகளை விதைத்தால் சிறந்த அறுவடையைப் பெறலாம். அதுபோலத்தான் எமது எதிர்காலத் தலைவர்களான இன்றைய சிறார்களுக்கும். மானுடம் போற்றும் சிறந்த கலாசார பண்பாட்டு விழுமியங்களைப் போதித்து வளர்த்தால், இன ஐக்கியத்துடன் கூடிய சௌஜன்யமான சகவாழ்வு கிட்டுவதோடு நாடு அமைதிப் பூங்காவாகவும் மிளிரும் என்று அவர் கூறினார்.
கடந்த 30 வருடகால யுத்தத்தின் விளைவாக மனிதர்களுடைய உள்ளங்கள் சிதைந்து விட்டன. யுத்தத்தின் காரணமாக சிதைவடைந்த கட்டடங்களையும் குடிமனைகளையும் வீதிகளையும் பாலங்களையும் செப்பனிட்டுக் கொள்ளக் கூடியதாக இருக்கின்ற அதேவேளை, சிதைவடைந்த மனித உள்ளங்களை சிறந்த கலாச்சாரப் பண்பாடுகளைக் கொண்டுதான் செப்பனிட முடியும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
2 hours ago
5 hours ago
5 hours ago