2025 மே 17, சனிக்கிழமை

ஓலைக் குடிசையில் வசித்துவருவோருக்கு நிரந்தர வீட்டுத்திட்டம்

Menaka Mookandi   / 2015 மே 24 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

–வடிவேல் சக்திவேல்

நாம் திராவிடர் எனும் அமைப்பினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் வசிக்கும், மிகவும் வறிய நிலையில் ஓலைக் குடிசையில் வசித்துவருவோருக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கும் திட்டமொன்று, நேற்று சனிக்கிழமை (23) அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கொடுவாமடு கிராமத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட ஓலைக் குடிசையில் வசித்துவரும் 2 குடும்பங்களுக்குரிய புதிய கல் வீடுகளுக்கான அடிக்கல் நடப்பட்டது. தலா ஒரு வீடு 3 இலட்சம் ரூபாய் பெறுமதியானது என மதிப்பிடப்பட்டுள்ளது.

நாம் திராவிடர் அமைப்பின் பங்குடாவெளி கோட்ட மகளிர் அணி செயலாளர் எஸ்.சுதாஜினியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், நாம் திராவிடர் அமைப்பின் தலைவர் க.மோகன், செயலாளர் வி.கமலதாஸ் பொருளாளர் ரஞ்சன் உப செயலாளர் கமல் மற்றும் கிராம சேவையாளர் கோகுலன் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

தமது அமைப்பின் மூலம் எதிர்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஓலைக் குடிசையில் வசித்துவரும் குடும்பங்களைத் தெரிவு செய்து அவர்களுக்காக நிரந்தர கல் வீடுகள் கட்டிக்கொடுக்கவுள்ளதாக நாம் திராவிடர் அமைப்பின் தலைவர் க.மோகன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .