2025 மே 17, சனிக்கிழமை

'வித்தியாவின் படுகொலையுடன் தொடர்புடையோருக்கு தயவுதாட்சண்யம் காட்டக்கூடாது'

Thipaan   / 2015 மே 24 , மு.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை  சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு எந்த தயவுதாட்சண்யமும் காட்ட யாரும் முன்வரக்கூடாது என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

'புங்குடுதீவு மாணவியின் படுகொலையானது ஈனச்செயலின் உச்சக்கட்டமாகும். இவ்வாறான செயல்களை புரிந்தவர்களுக்கு உச்சபட்ச தண்டனையை வழங்கவேண்டும். இவர்கள் மீது எவரும் தயவுதாட்சண்யம் காட்டக்கூடாது'.

'இந்த சம்பவமானது தமிழ் சமூகத்துக்கு நல்ல படிப்பினை தந்துள்ளது. இந்த நாட்டில் யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் எமது சமூகம் எந்த நிலையில் உள்ளது என்பதை அனைவருக்கும் ஒரு செய்தியாகவும் உள்ளது' என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

'இவ்வாறான சம்பவங்கள் இனிவரும் காலங்களில் நடைபெறாத வகையிலான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்ள வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் உள்ளோம்'

'இதுபோன்ற பல சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றேவருகின்றன. இவற்றினை தடுப்பதற்கான விழிப்புணர்வினையும் வழிநடத்தல்களையும் மேற்கொள்ளாமலேயே இருந்துவந்துள்ளோம்' என அவ்வறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது.

'எதிர்காலத்தில் எமது செல்வங்களை பாதுகாக்கதேவையானவை தொடர்பில் எமது சமூகம் சிந்திக்கவேண்டும்.

இவற்றினை யாரும் அரசியல் மயப்படுத்த முனையக்கூடாது. சிலர் இந்த சம்பவங்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தமுனைவதை காணமுடிகின்றது. இது தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்கவேண்டும்' என அதில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

'பாடசாலை மாணவிகளுக்கு பாடசாலைகளில் தங்களை பாதுகாப்பதற்கான விசேட செயற்றிட்டங்களை கல்வி திணைக்களம் மேற்கொள்ளவேண்டும்'.

'இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபட எண்ணுவோர், அதனை கனவிலும் நினைக்காதவகையில் சட்டங்கள் இயற்றப்பட்டு அவர்களுக்கான தண்டனையும் ஏற்படுத்தவேண்டும்'.

'உயிரிழந்த மாணவியின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதுடன் உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்' என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .