Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Gavitha / 2015 மே 24 , மு.ப. 09:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடிவேல் சக்திவேல்
உலகத்திலே சமூகமாற்றம், கல்வி மாற்றம் போன்றன இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் சில வேலைகளை மேற்கொள்வதற்கு சில அதிகாரிகள் தடையாக இருந்து வருகின்றமை கவலைக்குரிய விடையமாகும் என்று சமூர்த்தி, வீடமைப்பு பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பிரதான வீதியில் அமைக்கப்படவுள்ள புதிய பேரூந்து தரிப்பிடத்துக்குரிய அடிக்கல் ஞாயிற்றுக்கிழமை (24) நாட்டி வைக்கப்பட்டது.
அந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அபிவிருத்திகள் அரசியல் நேக்கத்துக்காக மேற்கொள்ளப்படவில்லை. எனக்கு மட்டக்களப்பு மாவட்டத்தின் மீது ஒரு தெளிவான பார்வை இருக்கின்றது. இன வேறுபாடுகளுக்கு அப்பால் ஒரு மனித நேயம் கொண்டவன் என்ன ரீதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் குடிபோதை ஒழிக்கப்படல் வேண்டும், வறுமையைப் போக்க வேண்டும் என்ற அடிப்படை விடயத்தில் நான் உறுதியாக இருக்கின்றேன்.
இந்த மாவட்டத்திலே இடம்பெற்ற போராட்டங்களும் சுனாமித் தாக்கமும் எமது மக்களை பிச்சைக்காரர்களாக ஆக்கிவிட்டுச் சென்றுள்ளன. எனவே இவற்றிலிருந்து எமது மக்களை விடுபடச் செய்ய வேணடுமெனில் இனவேறுபாடுகளுக்கு அப்பலிருந்து அபிவிருத்திகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
வறுமையினை ஒழிப்பதற்காக சமூர்த்தி பயனாளிகளை மையப்படுத்தி அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மட்டக்களப்பு மாவட்டத்திலும் உள்ள சமூர்த்தி பயனாளிகளுக்கு 2.7 வீதத்துக்கும் குறைந்த வட்டி வீதத்தில், ஒரு இலட்சம் ரூபாய் வரைக்கும், கடன் வழங்கும் ஒரு வேலைத்திட்டத்தினை முன்னெடுத்துள்ளோம். ஆனாலும் இதற்கும் சில அதிகாரிகள் தடையாக இருந்து வருகின்றார்கள்.
கடந்த காலங்களில் எமது பகுதிகளில் பல அமைப்புக்கள் அதிக வட்டி வீதத்துக்கு கடன்களை வழங்கிவிட்டு பின்னர் அதனை மக்கள் மீளச் செலுத்த முடியாமல் தற்கொலை செய்த சம்பவங்களும் பதிவாகியுள்ளன என்று கூறினார்.
தற்போது மலர்ந்துள்ள நல்லாட்சியில் இந்த மாட்டத்திலுள்ள மக்கள் அனைவருக்கும் அனைத்து வசதி, வாய்ப்புக்களும் கிடைக்கப்பெறல் வேண்டும். இந்நிலையில் எமது மக்களின் வாழ்வாதாரம் மேலோங்க வேண்டும், வறுமை ஒழியவேண்டும் இதற்கு அனைவரும் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
16 May 2025
16 May 2025