2025 மே 17, சனிக்கிழமை

நாச்சியார் உணவகம் இனந்தெரியாதோரால் தீ வைப்பு

Sudharshini   / 2015 மே 23 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா,ஏ.எச்.ஏ. ஹுஸைன்,எஸ்.பாக்கியநாதன்

மட்டக்களப்பு வந்தாறுமூலை காவியா பெண்கள் அமைப்பினால் வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில் அமைக்கப்பட்டிருந்த நாச்சியார் உணவகம், இனந்தெரியாதோரால் இன்று (23) தீ வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இத்தீ விபத்தினால் உணவகம் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

காவியா பெண்கள் அமைப்பின் ஊடாக மாவட்டம் தோரும் கணவனை இழந்த பெண்களின் வருமானத்திற்காக, நாச்சியார் பாரம்பரிய உணவக அமைத்து கொடுக்கப்பட்டுள்ளன.

செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் அண்மையில் அமைக்கப்பட்ட உணவகமே தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. குறித்த உணவகத்தின் ஊடாக பத்திற்கு மேற்பட்ட பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் தங்களது வாழ்வாதாரத்தை நடத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.

இது குறித்து ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .